வாட்ஸ்அப் காலில் பேசியதை பதிவு செய்வது:
உங்களுடைய வாட்ஸ்அப்பில் உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வாட்சப் காலில் பேசும் போது உங்களுடைய போனில் எப்படி பதிவு செய்வது என்று பார்க்கலாம், இதற்கு தேவை யானது Call Recorder - Cube ACR என்ற அப்ளிகேஷனை தான் இந்த அப்ளிகேஷனை உங்களுடைய மொபைல் போனில் பிளேஸ்டோரி லிருந்து பதிவு செய்து வைத்துக்கொள்ளவும். பதவி செய்து இன்ஸ்டால் செய்த பின் நீங்கள் உங்கள் வேண்டியவருடன் வாட்ஸாப் காலில் பேசும் பொழுது பேசுவதை தானாகே பதிந்து வைத்து கொள்ளாலாம். பதிய வேண்டாம் என்றால் அதில் அதற்குரிய வசதி அதிலே இருக்கும்.
8 பேர் வீடியோ கால்:
பொதுவாக வாட்ஸ்அப் வீடியோ காலில் 2 பேருடன் பேசும் வசதிதான் இருந்தது அடுத்ததாக 4 பேருடன் பேசும் வசதி கொண்டுவந்தனர், அடுத்ததாக தற்பொழுது 8 பேருடன் பேசும் அப்டேட்டை வாட்ஸாப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது,ஆம் வீடியோ கால் பேசும் பொழுது 8 பேரை அட் செய்து பேசலாம் அல்லது, ஒரு குழு உருவாக்கி மொத்தமாக வீடியோ கால் செய்து பேசலாம். மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் அடுத்ததாக 50 பேர் வீடியோ காலில் பேசும் வசதியை கொண்டுவரவுள்ளதாக கூறப்படுகிறது.
எளிதாக நம்பரை பதவி செய்யும் முறை:
நீண்ட நாள் கழித்து உங்கள் நண்பர் அல்லது தேவையானவர்களை பார்க்கும் பொழுது அவருடைய நம்பரை எளிதாக பதிவு செய்வது வாட்ஸ் ஆப் ஒரு புதிய அப்டேட்டடை கொண்டுவந்துள்ளது. அது, QR CODE. இந்த QR CODE யை உங்களுடைய நண்பருக்கு அனுப்பினால் தானகவே அவருடைய நம்பர் பதிவாகிவிடும். மேலும் இந்த ட்ரிக் வாட்ஸ்அப் பீட்டா வெர்சனில் மட்டுமே வந்துள்ளது. கூடிய சீக்கிரம் வாட்ஸ்அப் செயலியில் வரும் என வ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாம் அனுப்பும் வாய்ஸ் மெசேஜ் கேட்டு விட்டு அனுப்புவது:
வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் பேசிவிட்டு பேசுவதைக் கேட்டு விட்டு அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது நீங்கள் பொதுவாக வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் பொழுது தேவையானதை பேசிவிட்டு ஹோம் பட்டன் அல்லது பின்செல்லும் பட்டனை தொட்டால் மீண்டும் வாட்ஸ்அப் உள்ளே சென்று பார்த்தால் நீங்கள் பேசிய ஆடியோ நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அதை அதன் பிறகு கேட்டுவிட்டு அனுப்ப வேண்டுமா அல்லது வேண்டாமா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
ஆட்டோ கிளிக்கர்:
உங்களுடைய நண்பர்கள் அல்லது உங்களுக்கு வேண்டிய அவர்களை தொல்லை செய்யவேண்டுமா? அவர்களை தொல்லை செய்வதற்கு ஆட்டோமேட்டிக்காக மெசேஜ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் , இதற்கு தேவை ஆட்டோ கிளிக்கர் என்ற ஒரு அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷன் கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக இருக்கிறது, அந்த அப்ளிகேஷனில் சென்று பிளஸ் பட்டன் ஒன்று அதற்கு பிறகு 1 என்று நம்பர் வரும் அதை உங்களுக்கு தேவையான எழுத்தில் வைத்துக் கொள்ளவும். அடுத்த முறை அந்த ப்ளஸ் பட்டனை தொட்டால், 2 என்று வரும். மேலும் கடைசியாக செண்ட் பட்டனை ஒரு ப்ளஸ் பட்டனை வைத்துக்கொண்டு பிளே பட்டனை க்ளிக் செய்தால், அது ஆட்டோமேட்டிக்காக உங்களுக்கு தேவையான மெசேஜ்சை அனுப்பிக் கொண்டே இருக்கும்.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக