நாளொன்றுக்கு 300 ரூபாய் மதிப்புள்ள மூன்றாயிரம் டிக்கெட்டுகளை அளிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதையொட்டி திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் ஆகிய கெஸ்ட் ஹவுஸ்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது.
இன்று முதல் டோக்கன் வழங்கப்படுவதால் பக்தர்கள் ஆவலுடன் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். திருப்பதியில் உள்ள கவுண்டர்களின் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததை காண முடிந்தது.
அதேசமயம் டோக்கன் வாங்க வந்த பக்தர்கள் போதிய சரீர இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் முகக் கவசம் அணியாமலும் கூட்ட நெரிசலை ஏற்படுத்தியும் விதிமீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உரிய விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் இலவச தரிசன டோக்கன்களை கவுண்டர்களில் வழங்கும் நடைமுறையை ரத்து செய்துவிடுவோம். இவற்றையும் ஆன்லைனில் வெளியிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக