Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 23 ஜூன், 2020

கூகுள் பே-க்கு சிக்கலா?- உயர்நீதிமன்றத்தின் கேள்வி- ரிசர்வ் வங்கி அளித்த பதில்!

கூகுள் பே குறித்த டெல்லி உயர்நீதிமன்ற கேள்விக்கு, கூகுள் பே மூன்றாம் தரப்பு செயலிதான் என ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது. அடுத்த விரிவான விசாரணை ஜூலை 22 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண பரிவர்த்தனை செயலி

இந்தியாவின் பண பரிவர்த்தனை செயலியில் கூகுள் பே பிரதான செயலியாக உள்ளது என்பதில் ஆச்சரியம் இல்லை. எடுத்துக்காட்டாக பிரதான தொழில்நகரங்களில் பெட்டிக் கடையில் தொடங்கி சூப்பர் மார்க்கெட் வரை கூகுள் பே ஸ்கேன் போர்டு வைக்கப்பட்டிருக்கும்.

பிரதானமாக மாறிய கூகுள் பே

ரூ.5-க்கு பொருள் வாங்கி கடைக்காரரிடம் காசு கொடுப்பதற்கு பதிலாக மொபைலை காண்பிக்கும் பழக்கம்(ஸ்கேன் போர்டை ஸ்கேன் செய்து ஆன்லைன் பரிவர்த்தனை) பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ளது என்பது அனைவரும் அறிந்தது.

அனைவரிடமும் ஆன்லைன் பேமெண்ட்

கூகுள் பே போன்ற பணபரிவர்த்தனை செயலி அனைவரிடமும் அதிகரித்து வரும் காரணத்தால் ஏடிஎம், வங்கி போன்றவற்றை தேடவோ கையில் பணம் வைத்திருக்க வேண்டிய தேவையோ இல்லாத நிலை நீடித்து வருகிறது. அதுவும் தற்போதைய கொரோனா தொற்று பரவல் காலத்தில் ஏடிஎம் மூலம் தொற்று பரவும் நிலை ஏற்பட்டிருப்பதால் ஆன்லைன் பேமெண்ட் செயலி பிரதானமாக இருக்கிறது.

இந்திய அரசின் வணிக சட்டங்களுக்கு உட்படவில்லை

இந்த நிலையில் கூகுள் பே செயலி இந்திய அரசின் வணிக சட்டங்களுக்கு உட்படவில்லை, ஆர்பிஐ அனுமதி பெறவில்லை, கூகுள் பே பயனர்கள் பதியும் ஆதார் பான் வங்கி விவரம் போன்ற தனிநபர் விவரங்களுக்கு பாதுகாப்பு இல்லை போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட தகுதியில் இடம்பெறவில்லை

இந்த வழக்கானது மார்ச் 2019 ஆம் வருடம் payment system operators List என்ற ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட பணப் பரிவரத்தனை தகுதியில் கூகுள் பே இணங்காததை அடிப்படையாகக் கொண்டு தொடரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் டெல்லி உயர்நீதிமன்றம், ஆர்பிஐ அனுமதி வாங்காமல் கூகுள் பே சேவையை எவ்வாறு இந்தியாவில் செயல்படுத்த முடியும் என கேள்வி எழுப்பியது. இதுகுறித்து உடனடியாக தாக்கல் செய்யும்படி ரிசர்வ் வங்கிக்கும், கூகுள் நிறுவனத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

கூகுள் பே ஒரு மூன்றாம் தரப்பு பயன்பாட்டு செயலி

கூகுள் பே ஒரு மூன்றாம் தரப்பு பயன்பாட்டு செயலிதான் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது. எனவே, அதன் செயல்பாடுகள் 2007ஆம் ஆண்டின் கடன் மற்றும் தீர்வு முறை சட்டத்தை மீறவில்லை என ரிசர்வ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ரீதியில் மட்டும் உதவி

இதுகுறித்து கூகுள் பே தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் கூகுள் பே தங்களது செயலியுடன் இணங்கி ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் வங்கிகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் மட்டும் உதவுகிறது. தொழில்நுட்ப உதவி மேற்கொள்ள அனுமதி வாங்கத் தேவையில்லை எனவும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தேசிய கொடுப்பனவு கழகம் (என்.பி.சி.ஐ) வெளியிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்டண அமைப்பு ஆபரேட்டர்கள் பட்டியலில் அது இடம் பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தனிநபர் தரவு

அதேபோல் கூகுள் பே பயனர்களின் தரவு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. தனிநபர் தரவு என்பது அவர்களின் அடிப்படையாக பார்க்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் தகவல் திருட்டு எனபது மிகப் பெரிய சைபர் திருட்டாக நடைபெற்று வருகிறது.

ஜூலை 22 ஆம் தேதி விசாரணை

முறையான கண்காணிப்பு இல்லாமல் அமெரிக்க நிறுவனமான கூகுள் தனிநபர்களின் விவரங்கள், வங்கி பரிமாற்றத்தை கையாளுவது என்பது கேள்விக்குறியான விஷயமாக இருக்கிறதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுவதால் இதன் விசாரணை ஜூலை 22 ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக