Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 23 ஜூன், 2020

மாணவிகள் தான் இலக்கு., whatsapp தான் ஆயுதம்: ஹரியானாவை அதிரவைத்த கும்பல்- என்ன நடந்தது தெரியுமா?

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள், குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வாட்ஸ்அப்பை ஹேக் செய்து, தகவல்களை

வெளியிட்டுவிடுவேன் என போனில் மிரட்டல் வருவதாக ஃபரிதாபாத் சைபர் கிரைமில் பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார்.

பின்பு இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கிய ஹரியானா சைபர்கிரைம் போலீஸாருக்கு, சில அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. இந்த விசாரணையை மேற்கொண்ட போலீஸார், மிரட்டல் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 3பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவன் 12-ம் வகுப்பை சமீபத்தில் முடித்த 17-வயது சிறுவன்.

மேலும் அவர்களிடம் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பேசிய ஹரியானா போலீஸார் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்ததில் வாட்ஸ்அப் சாட்டை ஹேக் செய்து பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த மணீஷ், பூஜா மற்றும் மைனர் ஒருவர் என 3 பேரைக் கைது செய்திருக்கிறோம்.

இந்தத விசாரணையில் தெரியவந்தது என்னவென்றால்,பல்வால்,ஃபரிதாபாத், குருகிராம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பணம் பறித்திருக்கிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரிகள் பயிலும் மாணவர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களிடமிருந்து பெண்களின் செல்போன் நம்பர்களைப் பெற்றதாக தெரிவித்துள்ளனர். பின்னர் குறிப்பிட்ட மாணவிகளின் வாட்ஸ்அப் சாட்டை எப்படியோ ஹேக் செய்து அவர்களது தனிப்பட்ட தகவல்களை திருகின்றனர்.

அதன்பின்பு அந்த மாணவிக்கு போன செய்து தனிப்பட்ட தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறித்திருக்கிறார்கள். ஒருவேளை வங்கி கணக்கு விவரங்களை கொடுத்து அதில் பணம் போடவில்லை என்றால் அந்த தகவல்களை பொதுவெளிக்கு வந்துவிடும் என மிரட்டியிருக்கிறார்கள். எனவே இவர்களது மிரட்டலுக்கு பயந்து பலர் வங்கிகணக்குகளில் பணத்தை செலுத்தியிருக்கிறார்கள்.

இந்த கும்பலைச் சேர்தவர்கள் போலீ ஆதார் அட்டைகள் கொண்டு பெறப்பட்ட சிம்கார்டுகள் அப்பகுதியில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தில் பணிபுரியும் சத்தார் கான் என்பவர் கொடுத்து உதவியதும் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக சத்தார் கான் கொடுக்கும் நம்பரில் இருந்து மாணவிகளை தொடர்புகொண்டு மணீஷ் மற்றும் பூஜா ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள்.

வரும் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்கள்,அதேபோல பாதிக்கப்பட்ட மாணவிகளின் போனை ஹேக் செய்யும்போது அந்த போனில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செல்போன் நம்பர்களை எடுத்து, அவர்களுக்கு மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் போலி ஆதார் அட்டைகள் மூலம் பெறப்பட்ட சுமார் 392 செல்போன் நம்பர்களை செயலிழக்க செய்துவிட்டதாக ஹரியானா போலீஸார் தெரிவித்துள்ளனர். பின்பு இது குறித்துப்பேசிய ஹரியான மாநில சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி நவ்தீப் சிங் விர்க் கடந்த மே 12-ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை போலி ஆதார் அட்டைகள் கொடுத்து பெறப்பட்ட 392 சிம்கார்டுகளை டிஆக்டிவேட் செய்திருக்கிறோம்.

இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,செல்போன் எண்ணுக்கு வரும் ஒ.டி.பி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள கூடாது எனவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக