சீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டாமென்று பி.எஸ்.என்.எல் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் தாக்குதலில் 20 இந்தய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனையடுத்து சீன உபகரணங்களை, சீன தயாரிப்புகளை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் சீன உபகரணங்களுக்கு 4ஜி மேம்பாட்டை நிரகாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சீன தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டாமென்று மத்திய அரசு தெரிவித்துள்தாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிரச்சனையால் பிஎஸ்என்எல் 4ஜி தாமதமாகுமோ என சந்தேகம் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக