திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள சோமாஞ்சேரி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் நீதிவாசன். இவருக்கும் சடையங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், திருமணம் முடிந்த பின்னர் புதுமணத் தம்பதியினருக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, முதலிரவு அறைக்குள் சென்ற நீதிவாசன் மற்றும் சந்தியாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த நீதிவாசன் சந்தியாவை கடப்பாரை கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதில் இரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து நீதிவாசனை தீவிரமாக தேடி வந்தநிலையில் அவர் அப்பகுதியில் தோப்பு ஒன்றில் வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பின்னர் போலீசார் அவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமான அன்றே புதுமாப்பிள்ளை பெண்ணை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக