Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 13 ஜூன், 2020

மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய தந்தை, மகன் கைது..!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியைச் சேர்ந்தவர் குமார். இவரும் இவரது மகன் காளிதாசும் அப்பகுதியில் வசித்து வந்த மனநலம் பாதித்த பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து பல நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அப்பெண்ணுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அந்த பெண்ணை அவரது சகோதரர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண் 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் சகோதரர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குமார் மற்றும் அவரது மகன் காளிதாஸை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில், அவர்கள்தான் பலமுறை அப்பெண்ணை நைசாக பேசி பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மனநலம் பாதித்தவர்கள் குழந்தைக்கு ஒப்பானவர்கள் என்றும்கூட பாராமல், தந்தை மகன் என மாறி மாறி பலாத்தகாரம் செய்து கர்ப்பமாகிய சம்பவம் அப்பகுதியினரை மட்டுமல்ல அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக