காலை உணவே மனிதர்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்து நீண்ட காலம் உடல் நலனை காக்கிறது.
உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளில் மக்கள் ஈடுபடுகின்றனர். பெரும்பாலானோர் காலை உணவை தவிர்த்தால் இதன் மூலம் கலோரி குறைந்து உடல் எடை குறையும் என கருதுகின்றனர்.
வேலை சம்பந்தப்பட்ட மன அழுத்தம் மற்றும் பணிக்காக நீண்டதூரம் செல்வதால் சாப்பிடுவதற்கான நேரம் குறைவு போன்ற காரணங்களால் காலை உணவு சாப்பிடுவதை குறைத்துக் கொள்கின்றனர்.
நம்மில் சிலர் காலை உணவை முற்றிலுமாக தவிர்த்து விடுவோம். அப்படி தவிர்ப்பதால், நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கிராமப்புற மக்களை விட நகர்புற மக்களே அதிக அளவில் காலை உணவை தவிர்க்கின்றனர்.
நீரிழிவு நோய் ஏற்பட காலை உணவை தவிர்ப்பதும் ஒரு காரணம் என்பதை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது. நீரிழிவு நோயை தடுக்க தவறாமல் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
காலை உணவை தவிர்ப்பதன் மூலம், குறைப்பதன் மூலம் பலவித நோய்கள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாரத்தில் குறைந்தது 4 நாட்களுக்கு காலை உணவு சாப்பிடாவிட்டால் 2-வது பிரிவு நீரிழிவு நோய் ஏற்பட 55 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்த ஆய்வு 1 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டது.
காலை உணவை தவிர்ப்பதன் மூலம் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். அதுவே மன அழுத்தம் ஏற்பட வழிவகுத்து நீரிழிவு நோய் உருவாக முதல்படியாக அமையும்.
நடத்தப்பட்ட ஆய்வில் சர்வதேச அளவில் 30 சதவீதம் பேர் காலை உணவை தவிர்க்கின்றனர். மாறாக நொறுக்கு தீனியை உண்கின்றனர். பொதுவாக எந்த நேர உணவை தவிர்த்தாலும் மனஅழுத்தம் அதிகமாகி இன்சுலின் செயல்பாடு கூடும். அல்லது குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக