சூர்யாவின் நடிப்பில் வெளியான 24 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஹரியின் அருவா படத்திலும், கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இவரது இரட்டை வேட நடிப்பில் 2016ம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் '24'. ஒரு கைகடிகாரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் நித்யா மேனன், சமந்தா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் செக்கன்ட் பார்ட் மட்டும் வந்தால் சூர்யாவிற்கு இந்த படம் பெரிய கம்பேக்காக இருப்பதோடு, ரசிகர்களுக்கு பெரிய விருந்தாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக