இது ஒன்றும் புதிதில்லையே என்று கேட்கலாம். ஆமாம். குழந்தைகள் பிறக்கும் போதே உடலுக்கு ஆயில் மசாஜ் செய்வது உண்டு. ஆனால் நடக்கும் போது குழந்தைகளின் கால்களுக்கு கொடுக்க வேண்டிய வலு இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் தூங்கும் போது நல்லெண்ணெயை இலேசாக சூடு செய்து அதை குழந்தையின் இடுப்பின் கீழிருந்து தொடையிலிருந்து கீழ் நோக்கி பாதம் வரை இலேசாக மசாஜ் செய்தபடி தேய்க்க வேண்டும். குழந்தைகளுக்கு நன்றாக தூக்கம் வருவதோடு கால்களுக்கு நன்றாக வலுவும் கிடைக்கும். பிள்ளைக்கு தினமும் இப்படி செய்தால் கால்களில் தசைகளுக்கு நன்றாகவே வலு கிடைக்கும்.
அரிசி கஞ்சி நீர் - குழந்தைகள் நடக்க தொடங்கும் போது
புழுங்கலரிசி சாதத்தை வடிக்கும் போது அந்த நீரை வடித்து வைக்கவும். குழந்தையை குளிப்பாட்டும் போது குழந்தையின் இரண்டு கால்களை நேராக வைத்து இரண்டு கால்களையும் இலேசாக அழுத்தம் கொடுத்து இலேசாக திருப்பி திருப்பி முழங்கால்களிலிருந்து ஊற்ற வேண்டும். இவை நடக்க ஆரம்பிக்கும் குழந்தையின் கால்களுக்கு வலு கொடுக்கும்.
இன்னும் சிலர் குழந்தைகளுக்கு பாத் டப்பில் குளிப்பாட்டும் வழக்கம் இருந்தால் கஞ்சி நீரை ஊற்றி குழந்தையை பத்து நிமிடங்கள் இடுப்பளவு வைத்திருந்து எடுக்க வேண்டும். தினமும் இப்படி செய்தால் குழந்தையின் கால்களுக்கு வலு கிடைக்கும்.
உணவு மூலம் சத்துகள் - குழந்தைகள் நடக்க தொடங்கும் போது
குழந்தைகளை நடக்க செய்வதற்கு முக்கிய தேவை தாய்ப்பாலுக்கு அடுத்த இணை உணவுகள் தான். அதில் தான் கவனம் செலுத்த வேண்டும். தாய்ப்பாலுக்கு பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்துள்ள உணவுகளோடு கால்சியம் நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கால்சியம் நிறைந்த உணவுகளில் எதை கொடுக்க முடியுமோ அதை அவ்வபோது உணவில் சேர்த்து கொடுப்பது அவசியம்.
கால்சியம் உணவுகள் குழந்தைகளின் எலும்புகளை பலமாக வைத்திருக்கும். கால் எலும்புகள் பலவீனமாக இருந்தால் குழந்தையின் வளர்ச்சியிலேயே பாதிப்பு உண்டாகக்கூடும் என்பதையும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
நடைபயில கற்றுகொடுங்கள் - குழந்தைகள் நடக்க தொடங்கும் போது
குழந்தைகள் அடியெடுத்து வைக்கும் போது கால்களுக்கும் தசைகளுக்கும் வலு கொடுப்பது போன்றே குழந்தைக்கும் நடைபயிலவும் கற்றுத்தர வேண்டும்.
சில குழந்தைகள் வாக்கரில் விட்டு பழகுவதால் அவர்கள் நடக்கும் போது பெருவிரலை மட்டும் தாங்கி நடப்பதை பார்க்கலாம். அந்த குழந்தைகள் நடக்கும் போது கால் பாதங்கள் முழுமையும் பூமியில் பதிக்கும்படி நடக்க வைக்கவும். குழந்தையின் கால்களில் அழகான ஷூக்களை மாட்டிவிடுவதன் மூலம் குழந்தையின் நடை வேகமாகாது. வெற்று பாதங்களால் தான் குழந்தையை நடமாட செய்ய வேண்டும். பாதங்கள் பூமியில் நன்றாக அழுந்த செய்வதால் உடல் முழுக்க சமநிலையை உணர்வார்கள். குழந்தையின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடலில் தசைகள் வலுவாகும்.
இப்போதைய குழந்தைகள் பெரும்பாலும் கால்களில் வலு இல்லாமல் இருக்கிறார்கள். குழந்தையின் வளர்ச்சி தடைபடாமல் இயல்பாகவே இருக்கும் என்றாலும் அவை ஆரோக்கியமான வளர்ச்சியாக செய்ய வேண்டியது பெற்றோர்களின் கைகளில் தான் உள்ளது.
மேற்கண்ட முதல் இரண்டு குறிப்புகளை தொடர்ந்து செய்துவந்தாலே குழந்தைகள் தசை வலிமையோடு, உறுதியான கால்களை பெறுவார்கள். ஒரே மாதத்தில் குழந்தை தடுமாறாமல் நடப்பதை கண்சிமிட்டாமல் பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக