
ஜோதிகாவின்
பொன்மகள் வந்தாள் படத்தினை தொடர்ந்து ஓடிடியில் நடிகர் கலையரசனின் திரைப்படம்
வெளியாகவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா
வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல்
திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு முடிந்த பின்னரும்
திரையரங்குகள் திறக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது ஆகும் என்று சினிமா
வட்டாரங்களில் கூறப்படுகிறது .இதனால் பல பிரபலங்களின் படங்களை ஆன்லைனில்
வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.அதில் படப்பிடிப்புகள் முடிந்து
போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த பல படங்களை OTT platform-ல்
ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் முதற்கட்டமாக நடிகை ஜோதிகா நடிப்பில்
வெளியாகவுள்ள பொன் மகள் வந்தாள் படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்
பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் கீர்த்தி சுரேஷின் பெங்குயின் படத்தையும்,
அட்லியின் அந்தகாரம் படத்தையும் அமேசான் பிரேமில் ரிலீஸ் செய்யப்படும் என்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.
இந்த
நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தை ஓடிடியில் வெளியாகவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனரான ஜானகிராமன் இயக்கவுள்ள
'டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்' என்ற படத்தை ஓடிடியில் ரிலீஸ்
செய்யப்படவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் ஹீரோவாக மெட்ராஸ்
பட புகழ் நடிகரான கலையரசன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆனந்தி மற்றும் முக்கிய
கதாபாத்திரத்தில் அஷ்னா சவேரி, காளி வெங்கட், மதுமிதா உள்ளிட்ட பலர்
நடித்துள்ளனர். திருகுமரன் என்டர்டெயின்மெண்ட்டுடன் இணைந்து சி. வி. குமார்
தயாரிக்கும் இந்தப் படத்தில் நிவாஸ். கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். தற்போது
தயாரிப்பாளர் பிரபல ஓடிடி தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில்
ஓடிடியில் ரிலீஸ் செய்யும் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த
படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக