Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 ஜூன், 2020

தல 61- பில்லா கூட்டணி..? எந்த படத்தின் இரண்டாம் பாகம் தெரியுமா.?

 
 
இந்த கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ஆரம்பம் படத்தின் இரண்டாம் பாகம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
நடிகர் அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை, இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார், தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார், மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இசையமைக்கிறார், மேலும் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிப்பதாகவும், காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறார் இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து, அஜித் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்று சமுத்திக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது, அந்த வகையில் தற்பொழுது கிடைத்த தகவல், நீண்ட நாள் கழித்து விஷ்ணு வரதன் உடன் அஜித் இணையவுள்ளதாக தகவல்கள் செய்திகள் வெளியாகியுள்ளது.மேலும் இந்த கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ஆரம்பம் படத்தின் இரண்டாம் பாகம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக