ராமநாதபுரம் மாவட்ட குறை தீர்க்கும் பிரிவு செல்போன் எண்ணுக்கு ஓரினச்சேர்க்கை படங்கள் மற்றும் வீடியோக்களை தெரியாமல் அனுப்பிய அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட குறை தீர்க்கும் பிரிவு செல்போன் எண்ணுக்கு கடந்த 17 ஆம் தேதி சில ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்பப்பட்டுள்ளன. அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் நிர்வாணமாக உடலுறவுக் கொள்ளும் காட்சிகள், இடம்பெற்று இருந்துள்ளன. இதையடுத்து அந்த படங்களை அனுப்பியவர் யார் என்ற விசாரணையில் இறங்கினர் போலிஸார்.
விசாரணையில் கோவையை சேர்ந்த பிரேம் கிரண் என்பவரது பெயரில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து கோவை சென்று பிரேமை ராமநாதபுரம் அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தான் ஒரு பள்ளியில் அறிவியல் ஆசியராக பணிபுரிவதாக அவர் சொல்லியுள்ளனர். மேலும் ஒரு நண்பர் தந்த எண்ணை நம்பி அந்த எண்ணுக்கு ஆபாசப் படங்களை அனுப்பியதாக சொல்லியுள்ளார். இதையடுத்து அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது ராமநாதபுரம் மாவட்ட போலிஸ். அதன் பின் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையில் பிரேம் கிரணின் பெற்றோர் அவரைக் காணவில்லை என கோவை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் பரபரப்பான சூழல் உருவானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக