Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 22 ஜூன், 2020

நடுக்கடலில் தத்தளித்த சிறுமி..! கடவுளாக வந்த கப்பல்...!

samayam tamil

இந்த உலகில் எத்தனையோ மர்மமான விஷயங்கள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியாக இந்த பதிவில் நாம் 1961ம் ஆண்டு நடந்து இன்றும் தீர்க்கவே முடியாத ஒரு மர்மமான சம்பவம் பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.

நடுக்கடலில் படகு

1961ம் ஆண்டு அமெரிக்காவின் மியாமி பமாஸ் இடையே உள்ள கடலில் ஒரு சரக்கு கப்பல் பயணித்துக்கொண்டிருந்தது. அப்பொழுது கப்பலில் பணியிலிருந்த நிக்கோலஸ் தூரத்தில் ஒரு சிறிய படகு வருவதைக் கண்டார். நிலத்திலிருந்து தூரமாக உள்ள பகுதியில் சிறிய படகு இருப்பது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உடனடியாக இந்த படகு குறித்து தனது கப்பல் கேப்டன் தோ விடம் தெரிவித்தார்..

நடுக்கடலில் தவித்த சிறுமி

தோ அந்த படகு அருகே கப்பலைக் கொண்டு செல்ல உத்தரவிட்டார். அந்த படகில் 11 வயது சிறுமி ஒருவர் இருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கப்பல் கேப்டன் தோ அந்த சிறுமியை மீட்டு அடிப்படை மருத்துவச் சிகிச்சை மற்றும் உணவு அளித்து. அந்த சிறுமி குறித்துவிசாரித்தார்.

குடும்ப சுற்றுலா

அப்போது அந்த சிறுமி தனது பெயர் டேரி ஜோ எனவும், தான் தனது குடும்பத்தினர் மற்றும் தனது தந்தையின் நண்பரின் குடும்பத்தினருடன் சேர்ந்து படகில் ட்ரிப் வந்ததாகவும் படகு மூழ்கி அனைவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

தப்பிய தந்தையின் நண்பர்

அதன் பின் அவர் மியாமிக்கு கொண்டு சென்ற அந்த கப்பல் கேப்டன் அங்குள்ள துறைமுக போலீசாரிடம் ஒப்படைத்தார். அவர் நடத்திய விசாரணையில் டேரி ஜோ தனது தந்தை,தாய், மற்றும் தனது இரண்டு சகோதரர் மற்றும் தந்தையின் நண்பர் மற்றும் அவரது மனைவியுடன் ட்ரிப் சென்றுள்ளார் என்றும் அங்கு ஏற்பட்ட விபத்தில் டேரி ஜோ தப்பியுள்ளார் என்பதும், அந்த விபத்தில் தப்பியவர் டேரி ஜோ மட்டுமல்ல அவரது தந்தையின் நண்பரும் தப்பியுள்ளார் என்பது தெரியவந்தது.

தற்கொலை

அதன் பின் டேரி ஜோ உயிருடன் இருப்பது அவரது தந்தையின் நண்பருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு நாட்களில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் யாருக்கும் தெரியவில்லை. மேலும் படகில் என்ன நடந்தது? விபத்தில் மற்றவர்கள் சிக்கியபோது இவர்கள் எப்படித் தப்பினர் என எதையும் டேரி ஜோ சொல்ல மறுத்துவிட்டார். இதனால் இந்த விவகாரம் பெரும் மர்மமாகவே இருந்தது.

உண்மை வெளியானது

இந்நிலையில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் டேரி அந்த படகில் என்ன நடந்தது என்பதைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்.

அன்று நடந்தது

அவர் கூறியதாவது : "நான் படகில் கீழ்ப் பகுதியில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தேன். எனக்கு திடீரென ஒரு சத்தம் கேட்டது யாரோ அலறுவது போல் இருந்தது. அது படகின் மேல் தளத்திலிருந்து வந்ததாதல் அங்குச் சென்று பார்த்தேன்.

அங்கு எனது தாய் மற்றும் இரண்டு சகோதரர்கள் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தனர். அங்கு எனது தந்தையின் நண்பர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் என்ன நடந்தது என நான் கேட்டேன் அவர் என்னை தூக்கி கடலில் வீசிவிட்டார்.

உயிரை காப்பாற்றிய படகு

ஆனால் எனக்கு நீங்கள் மீண்டும் படகிற்குள் சென்றேன் அப்பொழுது படகு முழ்கி கொண்டிருப்பதைக் கண்டேன். உடனடியாக லைஃப் போட்டை எடுத்து தண்ணீரில் மிதக்க ஆரம்பித்தேன். 4 நாட்கள் நான் தண்ணீர், உணவு இல்லாமல் வெயிலிலும், குளிரிலும் வாடிய நிலையில் தான் அந்த கப்பல் வந்தது. " எனத் தெரிவித்தார்.

தீராத மர்மம்

ஆனால் அவர் ஏன் இவர்களைக் கொலை செய்தார். டேரி ஜோ கிடைத்த பின்பு அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார். டேரி ஜோ படகில் கீழ்ப் பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த போது மேலே என்ன நடந்தது? டேரி ஜோ படகிற்கு மேற்புறம் வந்தபோது அவரது தந்தையையும், தந்தையின் நண்பரின் மனைவியும் காணமுடியவில்லை அதற்கு என்ன காரணம் எனப் பல மர்மங்கள் இன்றும் தீராமலேயே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக