Google duo செயலியில் புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடியோகால் லிமிட் 32 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூகுள் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகள்
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இருக்கிறது. கூகுள் டுயோவில் கூடுதல் இணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது.
மொபைல் எண் அல்லது ஈமெயில் முகவரி
சமீபத்தில் கூகுள் டுயோ செயலியின் Settings பகுதியில் புதிதாக 'Add Account' என்ற தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மொபைல் எண் அல்லது ஈமெயில் முகவரி என இரண்டில் எந்த வகையில் டியோ அழைப்புகள் வரவேண்டும் என்பதை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
32 பேர் வரை வீடியோ கால்
இந்த நிலையில் தற்போது புதுப்பிப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் இப்போது க்ரோம்-க்கான வலைப்பதிவில் ஒரே நேரத்தில் 32 பேர் வரை வீடியோ கால் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
வானத்திலிருந்து மிகுந்த சத்தத்துடன் விழுந்த மர்மப்பொருள்! பீதியில் மக்கள்!
முன்னதாக 8 முதல் 12 ஆக இருந்தது
கடந்த மார்ச் மாதம் முதல் வீடியோ-கால் அழைப்பவர்களின் எண்ணிக்கை 8 முதல் 12 ஆக இருந்தது. இந்த நிலையில் இந்த அம்சம் சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து தயாரிப்பு மற்றும் வடிவமைப்பின் மூத்த இயக்குனர் சனாஸ் அஹரி லெமெல்சன் அவரின் டுவீட்டின் மூலம் தெரிவித்தார். அதன்பயன்படு தற்போதுதான் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதான தேவையில் வீடியோகால்
கொரோனா தொற்று பரவிய காலத்தில் இருந்து வீடியோ கால் என்பது குடும்பத்தினருக்கு தொடங்கி வேலை பார்ப்பவர்கள் ஆன்லைன் வகுப்புகள் என பிரதானமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீடியோ கால் சேவை வழங்கும் செயலிகள் அடுத்தடுத்த அப்டேட்களை வழங்கி வருகிறது.
Familymode சேவையும் அறிமுகம்
அதேபோல் கூகுள் டுயோ ஒரு புதிய குடும்ப பயன்முறை சேவை அதாவது Familymode ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. இது குடும்ப உறுப்பினர்கள் பங்குபெரும் வீடியோகால் சேவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
அடுத்தடுத்த அப்டேட்
அதுமட்டுமின்றி சிறப்பு செய்திகளைப் பகிர்வது போன்ற சில அம்சங்கள், வீடியோ தரம் உயர்வு போன்ற பல்வேறு அம்சங்கள் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுபோன்ற அறிமுகத்தின் மூலம் கூகுள் டுயோ கூடிய விரைவில் பிற வீடியோ கால் செயலிகளுக்கு போட்டியாகவரும் என்று சந்தேகம் இல்லை.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக