ரயில்வேயின் கொரோனா சிறப்பு வார்டு பெட்டிக்குள் ஆக்சிஜன் சிலிண்டர், உயிர் கழிப்பறைகள் ஆகியவை உள்ளன. ஆனால், அப்பெட்டிக்குள் ஊடுருவும் வெப்பத்தை குறைக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என முயற்சித்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருவதால் அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அனைத்து நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்த வேண்டியவர்களுக்கும் மருத்துவமனைகளில் இடவசதி பற்றாக்குறை காரணமாக ரயில் பெட்டிகளை கொரோனா சிறப்பு வாறுகளாக மாற்றி வருகின்றன.
இந்த கொரோனா சிறப்பு வார்டு பெட்டிக்குள் ஆக்சிஜன் சிலிண்டர், பவர் சாக்கெட்டுகள், உயிர் கழிவு (மருத்துவ கழிவு) கழிப்பறைகள், கொசுவலை, கைகழுவும் இடம் போன்ற பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், ரயில் பெட்டிகள் உலோகத்தால் ஆனது என்பதாலும் ஆக்சிஜன் சிலிண்டர், பயோ டாய்லட் (உயிர்கழிவு கழிப்பறைகள்) எவ்வாறு கையாள்வது என ரயில்வே மற்றும் மருத்துவ நிர்வாகம் திணறி வருகிறது. இதற்க்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.
இதுவரையில் 5321 ரயில் பெட்டிகள் கொரோனா சிறப்பு வாருட்களாக மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு வார்டுகளில் முதல் நிலை நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
மேலும், கூடுதலாக 960 ரயில்பெட்டி சிறப்பு கொரோனா வார்டுகள் ஐந்து மாநிலங்களில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் 503 ரயில்பெட்டி கொரோனா வார்டுகளும், உத்தரபிரதேசத்தில் 372 சிறப்பு வார்டுகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு வார்டுகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால் அதனை இதுவரை யாரும் பயன்படுத்தவில்லை. அந்த ரயில்வே சிறப்பு வார்டுகளில் மருத்துவ ஊழியர்கள் ஓய்வு எடுப்பதற்கு இரண்டு, மூன்று குளிரூட்டப்பட்ட அறைகள் மட்டுமே உள்ளனவாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக