பிரியாணியை விட அதிகமான சுவையில் தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
சீரகம்
தேங்காய் பால்
உப்பு
தக்காளி
பெரியவெங்காயம்
மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள்,
கிராம்பு
பச்சை மிளகாய்
அரிசி
இஞ்சி பூண்டு பேஸ்ட்
முதலில் குக்கரை எடுத்துக்கொண்டு அதில் எண்ணெய் ஊற்றி கிராம்பு மற்றும் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக வதக்கி விடவும் , பின் பெரிய வெங்காயத்தை எடுத்து நறுக்கிக்கொண்டு அந்த குக்கற்குள் போட வேண்டும் பின் இரண்டு பச்சை மிளகாயை எடுத்து கீறி அந்த குக்கருக்குள் போடவேண்டும் சிறிது நேரம் நன்றாக அனைத்தும் வதங்கிய பிறகு.
தக்காளி தேவையான அளவிற்கு வெட்டி வைத்துக் கொண்டு அந்த குக்கருக்குள் சேர்த்துவிடவும் அதற்கு அடுத்து இரண்டு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும் இதை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் அரை ஸ்பூன் தேவையான அளவு சீராக தூள் அதற்கு பிறகு சிறிதளவு மட்டுமே மஞ்சள்தூள் அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு மசாலாவில் நறுமணங்கள் போகும் வரை நன்றாக வதக்கவும்.
தக்காளி சாதத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியம் அதனால் தேவையான அளவிற்கு தேங்காய்ப்பால் மிகவும் லேசாக தயார் செய்து அந்த குக்கரில் ஊற்ற வேண்டும் அதற்கு பின் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விடவும், அடுத்ததாக கழுவி வைத்த அரிசியை எடுத்து அந்த குக்கரில் சேர்த்துவிட்டு கொத்தமல்லி சேர்த்து குக்கரை மூடி விடவும் ஒரு விசில் அல்லது இரண்டு விசில் வரும்வரை வைத்து கொள்ளவும் பின் ருசியான தக்காளி சாதம் ரெடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக