Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 8 ஜூன், 2020

வியர்வை துர்நாற்றத்தால் வெளியே செல்ல அவதிப்படுகிறீர்களா.? இந்த ஜூஸை குடிச்சு பாருங்களேன்.!

வியர்வை துர்நாற்றத்தை போக்க சூப்பர் டிப்ஸ்.

கோடை காலம் என்றாலே வியர்வை தான் நமக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும். இந்த பிரச்சினையால் வெளியில் செல்கையில் நிறைய பேர் சிரமப்படுவார்கள். ஆம் இந்த வியர்வை துர்நாற்றத்தால் மற்றவர்களிடம் நெருங்கி நின்று பேச முடியாது. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா வியர்வை மணமுற்றது, ஆனால் இந்த வியர்வை நமது உடலுள்ள சில பாக்டீரியாக்களுடன் சேர்கையில் துர்நாற்றமாகிறது. பலர் இந்த துர்நாற்றத்தை மாற்ற பல வகையான நறுமண பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை எல்லாம் ஒரு சில நேரத்திற்கு மட்டுமே உதவும்.

இந்த வியர்வை துர்நாற்றத்திலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள இந்த ஜூஸ்ஸை குடிச்சு பாருங்களேன். காய்கறிகள் மற்றும் பழங்களால் உருவாக்கப்படும் இந்த ஜூஸ் துர்நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். தற்போது ஜூஸ் செய்யும் முறையை பார்ப்போம். 

தேவையானவை

  • ஆப்பிள் - 1
  • பார்ஸ்லி - 1
  • முட்டைகோஸ் இலைகள் - 3 அல்லது 4
  • இஞ்சி - 1/2 இன்ச்
  • எலுமிச்சை - 1

செய்முறை 

முதலில் இந்த பொருட்களை அனைத்தையும் நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதனையடுத்து இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளுங்கள். அதனை ஒரு கிளாஸில் ஊற்றி கொள்ளுங்கள். வியர்வை துர்நாற்றத்தை போக்கும் ஜூஸ் தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக