முக்கனிகளில் முதல் கனி என்றால் மாம்பழம் என்று கூறலாம், சிரியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம், இந்த பலத்தை சாப்பிட்டால் என்ன நன்மை என்பதை பார்ப்போம்.
இந்த மாம்பழத்தில் வைட்டமின் A சத்து அதிகமாக இருக்கிறது, மேலும் 11% லிருந்து 25% சர்க்கரை சத்துள்ளது, மேலும் இந்த பழத்தில் கேரட்டின் இருப்பதால் தான் மஞ்சளாக இருக்கிறது, இந்த மாம்பழம் பழத்தை சாப்பிட்டால் சளி நோயிலிருந்து விடுபடலாம்.
வைட்டமின் C வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள் இந்த பழங்களில் இருப்பதைவிட அதிகமாக மாம்பழம் பழத்தில் உள்ளது, மேலும் வைட்டமின் c நமது உடலில் குறைந்தால் மூட்டுவலி , நரம்பு தளர்ச்சி, தலைவலி, சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும், அதனால் மாம்பழத்தை சாப்பிட்டு வந்த இந்த பிரச்னைகளில் விடுபடலாம் என்றே கூறலாம். மேலும் இந்த மாம்பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் வளர்ச்சிதை மாற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக