சீதாப்பழத்தை நாம் உண்ணவதுண்டு ஆனால் அதனுடைய விதையில் உள்ள பயனை அறிந்ததிலை இப்போ பாருங்க.
சீதாப்பழம் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும் சொல்லுங்கள் சீதாப்பழம் மிகவும் பிரபலமான ஒரு ருசியான பழமாகும். சீதாப்பழத்தின் சுவை பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் நாம் நிறையஅறிந்திருப்போம். ஆனால், ஒருபோதும் அதன் கொட்டைகளில் இருக்கும் நன்மைகளை பற்றி அறிந்ததுண்டா ? நிறய பழங்களின் விதைகளை நாம் தேவையில்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது தவறு இதோ பாருங்கள்.
பேன் மற்றும் ஈறுகளால் தலையை சொரிந்தே நீங்கள் வெறுப்பில் உள்ளீர்களா .இதை போக்க கடைகளில் கிடைக்கும் ஷாம்பூ மற்றும் எண்ணெய்களால் தேய்த்து அலுத்துப்போய் உள்ளீர்களா. இந்த தொல்லையைப் போக்க சீதாப்பழ கொட்டைகளை பயன்படுத்துங்கள். சீதாப்பழ கொட்டைகளை தூளாக அரைத்து தண்ணீருடன் சேர்த்து பசை போல கலக்கி கொள்ளவும். இதனை தலையில் தடவி 10 நிமிடங்கள் காயவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் கொண்டு அலசவும். இந்த முறையை ஒரு மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், பேன் தொல்லைகளில் இருந்து நிரந்தர தீர்வை பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக