Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 8 ஜூன், 2020

காலையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்.!

காலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய உணவுப்பொருட்கள்.

காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துவிட்டு கண்டிப்பாக காலை உணவு அருந்துவது கட்டாயமான ஒன்று இந்த நிலையில் காலையில் எழுந்தவுடன் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம்.

நீர்: காலையில் எழுந்தவுடன் தண்ணியை இளம் சூட்டில் வைத்துக் கொண்டு வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் அளவிற்கு குடித்தாள் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைத்துவிடும் மேலும் இது கழிவுகள் வெளியேறி நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் மேலும் உங்களுடைய சர்மம் இளமையை கொடுக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகளை நீக்கும்.

வெந்தய நீர் : வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் மேலும் ரத்தத்தை சீராக்கி  சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் சீரகத் தண்ணீர் குடித்தால் அஜீரணக் கோளாறு போன்றவை தீரும்

தேன்: சூடான நீரில் தேனை கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலம் தரும் சளி மற்றும் இருமல் போன்ற நோய்களை தீர்க்கும் மேலும் ரத்தத்தை சுத்தம் செய்து உடலை மென்மையாக்கும் மேலும் வயிற்று எரிச்சலை குறைக்கும் தூக்கம் இல்லாத மனிதர்கள் தேனை நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை தீரும்.

கஞ்சி: காலையில் கஞ்சி சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி தந்து சளி போன்ற பிரச்சனைகளை தீர்த்து விடும் மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் இதயம் பலவீனமானவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும் மேலும் இந்தக் கஞ்சி சாப்பிட்டால் வயதில் வயதான தோற்றம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனைகளை தீர்த்து விடும். இந்த அரிசி கஞ்சியை சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுக்க வேண்டாம்

முளைக்கட்டிய பயறு: இந்த முளைக்கட்டிய பயரை காலையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது இதில் வைட்டமின்கள் தாது உப்புகள் புரோட்டின்  போன்ற சத்துக்கள் உள்ளன மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இந்த முளைக்கட்டிய பயிறு சூரிய வெயிலில் இருந்து நமது  சருமத்தை பாதுகாக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக