Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 8 ஜூன், 2020

‘Remove China Apps’ ஏன் நீக்கினோம் பதிலளித்த கூகுள் ! மீண்டு வந்த ‘Mitron’

கூகுள் நிறுவனம் தனது பிளேஸ்டோரிலிருந்து  இந்தியாவை சார்ந்த ‘Mitron’ and ‘Remove China Apps’ என்ற இரண்டு செயலிகளை நீக்கியது இதற்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அதற்கு விளக்கமளித்துள்ளது கூகுள் .

Mitron:

Mitron செயலி உலகமுழுவதும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் டிக்டாக் செயலியை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது .இந்த செயலியானது  பாகிஸ்தானை சேர்ந்த TicTic என்ற செயலியின் நகலாகும்.இது பிளேஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டதற்கு விளக்கமளித்துள்ள Android மற்றும் Google Play இன் துணைத் தலைவர் சமீர் சமத் Mitron செயலியில் தொழில்நுட்ப கொள்கை மீறல்கள் இருந்ததால் அதை நீக்கினோம்.

டெவலப்பர்கள் சிக்கல்களைச் சரிசெய்யவும், அவர்களின் பயன்பாடுகளை மீண்டும் சமர்ப்பிக்கவும் அவர்களுக்கு உதவும் அதற்கான வழிமுறைகள்  உள்ளது. இந்த டெவலப்பருக்கு நாங்கள் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம் அதை அவர்கள் சரிசெய்து மீண்டும் இணையலாம் என்று தெரிவித்தார். இந்நிலையில் அந்த குறைபாடுகள் நீக்கப்பட்டு தற்பொழுது மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது Mitron .

Remove China Apps:

Remove China Apps செயலியை பற்றி கூறுகையில் இந்த செயலியானது  இந்தியாவில் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பிரபலமானது .இது பயனர்களை மற்றசெயலிகளை பயன்படுத்தவேண்டாம் என்ற நோக்கில் செயல்படுகிறது .இது நல்ல ஆரோக்கியமான போட்டியாக இருக்காது புது புது படைப்புகளை உருவாக்கி ஆரோக்கியமான போட்டியாக இருக்கவே நாங்கள்  விரும்புகிறோம் .அதுவே எங்கள் கொள்கை ,இந்த செயலி மீண்டும் வர எந்த உறுதியும் இல்லை என்று சமத் தெரிவித்தார்

Remove China Apps கூகிள் பிளேயில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது, Mitron  5 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது இது கூகிள் பிளேயில் 4.7 நட்சத்திர மதிப்பீட்டைக் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக