Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 10 ஜூன், 2020

அவசரப்பட்டு வேற வயர்லெஸ் ஹெட்போன் வாங்கிடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!

போட் நிறுவனம் தொடர்ந்து இந்திய சந்தையில் மிகவும் மலிவு விலையிலான அதே சமயம் மிகவும்தரமான ஆடியோ தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது.
அதனொரு பகுதியாக போட் நிறுவனம் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் "ஏர்டோப்ஸ்" ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அது போட் ஏர்டோப்ஸ் 441 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் (Boat Airpods True Wireless Earphones) ஆகும்.

தற்போது இது அமேசான் வழியாக வாங்க கிடைக்கிறது. புதிய போட் ஏர்டோப்ஸ் 441 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் ஆனது ஐந்து வண்ண விருப்பங்களின் கீழ் அறிமுகமானது ஆனாலும் அதில் இரண்டு வண்ண விருப்பங்கள் மட்டுமே தற்போது இந்தியாவில் வாங்க கிடைக்கிறது. மீதமுள்ள மூன்று வண்ணங்கள் வரும் வாரங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய போட் ஏர்டோப்ஸ் 441 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸின் விலை நிர்ணயம் என்ன? அம்சங்கள் என்ன? போன்ற முழு விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்!

போட் ஏர்டோப்ஸ் 441 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் அம்சங்கள்:

ஏர்டோப்ஸ் தொடரின் கீழ் வெளியான வயர்லெஸ் இயர்போன்களுடன் ஒப்பிடும் போது போட் ஏர்டோப்ஸ் 441 முதன்மையானது அல்ல இருப்பினும் இவைகள் மேம்பட்ட அம்சங்களுடன் வருகின்றன, அதுவும் மற்றவைகளை விட மிகவும் மலிவான விலையில்.

போட் ஏர்டோப்ஸ் 441-இல் ப்ளூடூத் 5.0 இணைப்பு உள்ளது. மேலும் அவை 6 மிமீ டைனமிக் டிரைவர்களால் இயக்கப்படுகின்றன. இது ஐபிஎக்ஸ் 7 சான்றளிக்கப்பட்டதாகும்.

அதாவது இந்த இயர்போன்கள் தண்ணீர் அல்லது வியர்வையால் சேதமடையாது, எனவே நீங்கள் இவற்றை எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் வசதியாக பயன்படுத்தலாம். மற்ற சாதனங்களுடன் மிக விரைவாக இணைக்க உதவும் ‘இன்ஸ்டா வேக் அன்ட் பேர்’ எனும் அம்சம் இந்த போட் ஏர்டோப்ஸ் 441-இல் உள்ளது.

போட் ஏர்டோப்ஸ் 441-இன் இந்திய விலை நிர்ணயம்:

போட் நிறுவனத்தின் இந்த புதிய இயர்போன்ஸ் ரூ.2,499 என்கிற இந்திய விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. மற்ற ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களுடன் ஒப்பிடும் போது இதன் விலை திகம் இல்லை என்றாலும் கூட, வேறு சில தயாரிப்புகளை விட இது இன்னுமும் கொஞ்சம் விலை உயர்ந்ததாகவே உள்ளது.

அப்படியாக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தயாரிப்புகளில் ஒன்று தான் - ரெட்மி இயர்பட்ஸ் எஸ். ரெட்மி இயர்பட்ஸ் எஸ்-இன் விலை ரூ.1,799 ஆகும், இது போட் ஏர்டோப்ஸ் 441-இந்த விலையை விட குறைவு என்பது வெளிப்படை.

இருப்பினும் போட் ஏர்டோப்ஸ் 441-ஐ வாங்க சில காரணங்கள் இருக்கிறது!

நல்ல விஷயம் என்னவென்றால், போட் ஏர்டோப்ஸ் 441 ஆனது 25 மணி நேரம் வரை இயங்கக்கூடியது மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. கடந்த ஆண்டு ரூ.2,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட போட் ஏர்டோப்ஸ் 451 உடன் ஒப்பிடும்போது, போட் ஏர்டோப்ஸ் 441 ஒரு நல்ல முன்னேற்றம் என்றே கூறலாம், நம்பியும் வாங்கலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக