Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 13 ஜூன், 2020

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு…

ஆப்கானிஸ்தன் நாட்டில் உள்ள ஒரு மசூதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமையின் போது, பயங்கர  சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இந்த மசூதியின் இமாம் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அரசிற்கும் தாலிபன் பயங்கரவாதிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்க அரசு தொடங்கியது. இதற்கு முக்கிய பங்காற்றி வந்த 4 இமாம்கள் மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக