Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 13 ஜூன், 2020

'காட்மேன்’ தொடர் சர்ச்சை; ஆபாச பதிவுகளால் அதிர்ச்சி - வாலிபரை ரவுண்ட் கட்டிய போலீஸ்!

சண்முக சுந்தரம் கைது 

இணைய தொடர் தயாரிப்பாளரின் மனைவி மற்றும் கடவுள்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் பதிவிட்ட இளைஞரை நெல்லை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் மேற்கு ரத வீதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம்(33). இவர் சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கியுள்ளார். அதில் ‘காட்மேன்’ என்ற இணையதள தொடர் பற்றி தவறான கருத்துகளை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்த தொடரின் தயாரிப்பாளர், அவரது மனைவி குறித்து ட்விட்டர் மற்றும் ஹலோ உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் ஆபாசமாக சித்தரித்து படம் வெளியிட்டுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்தனர். அதாவது சண்முக சுந்தரம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் காவல் துறையினரின் சமூக ஊடகப் பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். அதில் போலியான கணக்கில் சமூக வலைத்தளங்களில் சண்முக சுந்தரம் தொடங்கியிருப்பது தெரியவந்தது.
samayam tamil
அதில் பெண்களுக்கு எதிராகவும், பல்வேறு மதக் கடவுள்களுக்கு எதிராகவும், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் தொடர்பாகவும் ஆபாசமாக சித்தரித்த படங்களை வெளியிட்டுள்ளார்.

அதுவும் “வண்ணத்துப்பூச்சி” என்ற பெயரில் சமூக வலைத்தள கணக்குகள் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து களத்தில் இறங்கிய போலீசார் சண்முக சுந்தரத்தை கைது செய்து சிறையில அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக