கொரோனாவால் நாடே வீட்டில் முடங்கிய
நிலையில் முகேஷ் அம்பானி மட்டும் தனது ஜியோ நிறுவனத்திற்குப் புதிய முதலீடுகளைக்
கொண்டு வர வேண்டும் என இரவு பகலாகப் பணியாற்றி, கடந்த 8 வாரத்தில் 8 முதலீடுகள்
மூலம் 13 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது.
இதோடு இன்னும் 4 முதலீட்டாளர்களுடன்
ஜியோ முதலீட்டுக்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் டிஜிட்டல்
துறையில் முக்கிய அம்சமான பொழுதுபோக்குப் பிரிவில் அடுத்தகட்ட வளர்ச்சியை அடைய
முகேஷ் அம்பானி முக்கியமான திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
ஆம், முகேஷ் அம்பானி இந்திய டிஜிட்டல்
துறையில் அடித்தக்கட்டத்திற்குச் செல்ல நெட்பிளிக்ஸ் உடன் கூட்டணி வைக்கப்
பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வாய்காம் 18
முகேஷ் அம்பானி கட்டுப்பாட்டில்
இருக்கும் பொழுதுபோக்கு நிறுவனமான வாய்காம் 18 வாயிலாகப் பல வருடக் கூட்டணிக்காக
நெட்பிளிக்ஸ் உடன் கூட்டணிக்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்
கிடைத்துள்ளது. இதன் பின்பு இந்தியாவில் பெரிய அளவிலான வர்த்தகத்தையும்
content-ஐயும் உருவாக்க திட்டமிட்டுள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான வாய்காம் 18.
நெட்வொர்க் 18
10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் இருக்கும் நெர்வொர்க் 18 நிறுவனத்தின் கிளை நிறுவனம்
தான் வாய்காம் 18. நெர்வொர்க் பல்வேறு பொழுதுபோக்கு, செய்தி துறையில் வர்த்தகம்
செய்து வருவது குறிப்பிடத்தக்கது,
இந்தக் கூட்டணியில் 10 வெப் ஷோக்களைத்
தயாரிக்கும் எனத் தெரிகிறது. மேலும் வாய்காம் 18 அமேசான் ப்ரைம் உடனும் கூட்டணி
வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சிகள் மூலம் டிஜிட்டல் பொழுதுபோக்கு
துறையில் ஜியோ, நெர்வொர்க் 18 வாயிலாக ரிலையன்ஸ் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச்
செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஜியோ
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ்
இண்டஸ்ட்ரீஸ் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் டெலிகாம் சந்தையில்
2016ஆம் ஆண்டு அதிரடியாகக் களமிறங்கியது. ஜியோவின் வருகை இந்தியாவில் இருந்து
சின்னசின்ன டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் தெறித்து ஓடியது மட்டும் அல்லாமல் பெரு
நிறுவனங்களின் வர்த்தகத்தையும் தலைகீழாக மாற்றியது. ஜியோவின் அதிரடிகள் இன்னும்
குறையாமல் தற்போது ரீடைல் மற்றும் டிஜிட்டல் உலகிற்கு நுழைந்துள்ளது.
இண்டர்நெட்
இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு
அதிகமாக இருந்தாலும் சாமானியர்கள் கையில், அதுவும் மிகவும் குறைந்த விலையில்
கொண்டு சேர்த்து ஜியோ. இண்டர்நெட் தான் அடுத்த எதிர்காலம் என்பதை உணர்ந்த முகேஷ்
அம்பானி. கச்சா எண்ணெய் வர்த்தகத்தைத் தவிர அனைத்து வர்த்தகத்தையும் ஜியோவின்
வாயிலாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடிவு செய்தார்.
இதன் விளைவாகத் தான் இன்று ரிலையன்ஸ்
ரீடைல்-இன் முக்கியப் பிரிவான ஜியோமார்ட், ரிலையன்ஸ் டிரென்ஸ் ஆகியவை டிஜிட்டல்
தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய முதலீடுகள்
இந்நிலையில் ஜியோ நிறுவனத்தில்
அடுத்தாக Saudi Arabia's sovereign Public Investment Fund நிறுவனம் முதலீடு செய்ய
உள்ளது. இதற்காக ஜியோ மற்றும் சவுதி முதலீட்டு நிறுவனங்கள் இறுதிக்கட்ட
பேச்சுவார்த்தையை எட்டியுள்ளது.
இதோடு அமெரிக்காவின் முன்னணி பங்கு
முதலீட்டு நிறுவனமான TPG கேப்பிடல் ஜியோ நிறுவனத்தில் 1.5 பில்லியன் டாலர் முதலீடு
செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதேபோல் ஜியோ நிறுவனத்தில் 6 சதவீத
பங்களில் முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் மற்றும் கூகிள் போட்டி போட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக