டிக் டாக் (Tik Tok) ஆப்பிற்கு போட்டியாக பெங்களூரை சேர்ந்த கம்ப்யுட்டர் புரோகிராமர்கள் இருவர், சிங்காரி (Chingari) எனும் செயலியை உருவாக்கியுள்ளனர்.
உலகம் முழுக்க பல கோடிக்கணக்காண ஸ்மார்ட் போன் பயணர்களை கவர்ந்துள்ளது டிக் டாக் செயலி. அதிலும் இந்தியர்கள் மத்தியில் இந்த ஆப் மிகவும் பிரபலம்.
தற்போது இந்த ஆப்பிற்கு போட்டியாக பெங்களூரை சேர்ந்த கம்ப்யுட்டர் புரோகிராமர்களான பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கௌதம் ஆகியோர் சிங்காரி (Chingari) எனும் செயலியை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆப் மூலம், வீடியோ ஆடியோ பதிவேற்றம், பதிவிறக்கம், மீம்ஸ் பதிவிறக்கம், காமெடி வீடியோ , ஆடியோ பதிவிறக்கம், நண்பர்களுடன் சேட் மெசேஜ் செய்வது என பல்வேறு வசதிகள் அடங்கியுள்ளதால், இந்த ஆப் ஸ்மார்ட் போன் பயணர்கள் மத்தியில் வரவேற்பை பெற தொடங்கியுள்ளது. இதுவரையில் 1 லட்சம் பேர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக