உடுக்கை படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கும் பாலமித்ரன் அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
சமீப காலமாக சினிமாயுலகம் பல பிரபலங்களின் இழப்புகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் கூட ஜி. வி. பிரகாஷின் 4ஜி படத்தின் இயக்குனரான அருண் பிரசாத் தனது முதல் படத்தை கூட பார்க்க இயலாமல் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழத்தியது. இந்நிலையில் தற்போது சினிமாவில் பல போராட்டங்களுக்கு பின்னர் முதல் படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் தான் பால மித்ரன். தற்போது இவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலையை சேர்ந்த பாலமித்ரன் முதலில் இயக்குநரான சுகி மூர்த்தியிடம் உதவி இயக்குநரான பணியாற்றி வந்தார். அதன் பின்னர் உடுக்கை என்ற தனது முதல் படத்தை சில மாதங்களாக இயக்கி வந்தார். இந்த படத்தில் விபின், சஞ்சனா சிங், அங்கிதா, மொட்டை ராஜேந்திரன், மயில் சாமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புகள் மீதம் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த ஊரடங்கில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கவனித்து வந்த பாலமித்ரன், சமீபத்தில் உடல்நிலை குறைவால் வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் போதிய பணமில்லாமல் வறுமையை சந்தித்த இவருக்கு இயக்குநர் சங்கம் உதவி செய்தது. அதனையடுத்து நேற்றைய தினம் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது திரையுலகில் உள்ள அனைவருக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பாலமித்ரன் அவர்களுக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தனது முதல் படத்தை கூட பார்க்காமலே போய் விட்டாரே என்று பலர் கூறி தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக