Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 11 ஜூன், 2020

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது - உச்சநீதிமன்றம்.!

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போதிய இடங்கள் கிடைப்பது இல்லை. இதனால்,  பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பல  இடங்களை இழந்துள்ளனர் என குற்றச்சாற்று எழுந்துள்ளது.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த மனுக்களை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரே காணத்திற்காக அனைத்து கட்சிகளும் இணைந்தது  வரவேற்கத்தக்கது. ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது. மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் கூறியது.

மேலும், இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக