Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 12 ஜூன், 2020

சுகாதாரத் துறை செயலாளர் பொறுப்பில் இருந்து பீலா ராஜேஷ் மாற்றம்...!

சுகாதாரத் துறை செயலாளர் பொறுப்பில் இருந்து பீலா ராஜேஷ் மாற்றம்...!



தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றப்பட்டு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மீண்டும் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பீலா ராஜேஷ் வணிகவரித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாகத்துறை ஆணையராகவும் தொடர்ந்து நீடிப்பார் என தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத் துறையின் செயலராக IAS அதிகாரியான டாக்டர் பீலா ராஜேஷ் செயல்பட்டுவந்தார். இந்நிலையில், தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் அந்தத் துறையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, வர்த்தக வரி மற்றும் பதிவுத் துறையின் செயலராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள ஜெ. ராதாகிருஷ்ணன் புதிய சுகாதார துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் அவர் தொடர்ந்து கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீலா ராஜேஷ் சுகாதார துறைச்செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக ராதாகிருஷ்ணன் தான் சுகாதாரத் துறைச் செயலராக 2012 - 2019 ஆண்டுகள் வரை பதவி வகித்தார். தற்போது தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலை கையாளும் வகையில் அவர் சுகாதாரத் துறை செயலாளராக மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார். ஏற்கனவே, ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெ. ராதாகிருஷ்ணன் கூறுகையில்... கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொற்று பரவலைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக