Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 8 ஜூன், 2020

கொரோனா: 'பில்' கட்டாததால் முதியவரை கட்டிப்போட்ட தனியார் மருத்துவமனை!!

மத்தியப் பிரதேச மாநிலம், ராஜ்கார்க் மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் கொரோனா நோய்த்தொற்றுக்கு அண்மையில் ஆளாகியுள்ளார். இதையடுத்து அவரை, ஷாஜாப்பூர் நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவரது குடும்ப உறுப்பினர் அனுமதித்துள்ளனர்.
சில நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், முதியவரை டிஜ்சார்ஜ் செய்யலாம் என்று மருத்துவர்கள் இன்று கூறியதாக தெரிகிறது.

இதனால் மகிழ்ச்சியடைந்த முதியவரின் உறவினர்கள் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல இன்று மதியம் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

அப்போதுதான் 11 ஆயிரம் ரூபாய் சிகிச்சைக் கட்டணம் பாக்கி உள்ளதாகவும், அந்தத் தொகையை கொடுத்தால்தான் முதியவரை டிஜ்சார்ஜ் செய்ய முடியும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த முதியவரின் உறவினர்கள், தாங்கள் ஏற்கெனவே சிகிச்சை கட்டணமாக 11 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளோம். பிறகும் மேற்கொண்டு ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மருத்துவமனை நிர்வாகம், ஓ... உங்களுக்கெல்லாம் கேள்விக் கேட்கும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா என்ற ரீதியில், தாங்கள் கேட்டும் பணத்தை செலுத்திவிட்டு முதியவரை டிஜ்சார்ஜ் செய்து கொள்ளுங்கள எனக் கூறியதுடன், 80 வயது முதியவர் என்றும் பாராமல், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட கட்டிலிலேயே அவரை கிடத்தி கை,கால்களை கட்டிப் போட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, ராஜ்கார்க் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக