Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 8 ஜூன், 2020

முஸ்லீம் நோயாளிகளுக்கு ’நோ’? - சர்ச்சை சாட்டிங்கால் சிக்கலில் மாட்டிக் கொண்ட மருத்துவமனை!

நாடு முழுவதும் கொரொனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் தான் கடவுளாக காட்சியளிக்கின்றனர். எந்தவித பாரபட்சமும் இன்றி தங்களுக்கு சிகிச்சை அளித்து குணமாக்கி விடுவர் என்று நம்பிக்கையில் உள்ளனர். இந்த சூழலில் மருத்துவர்கள் குறிப்பிட்ட மதத்தினருக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் நிலைமை என்னவாகும்? ஏன் அவர்கள் மட்டும் என்ன தவறு செய்தார்கள் என்று கேள்வி எழுகிறது. ஆம். நிஜத்தில் அப்படியொரு சம்பவத்திற்கு முன்னுதாரணமான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது.
samayam tamil
இதுதொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சுரு நகர போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபற்றி சர்தார்ஷாஹர் காவல்நிலைய துணை ஆய்வாளர் ரமேஷ் பன்னு கூறுகையில், தனியார் மருத்துவமனை ஒன்று முஸ்லீம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக எங்களுக்கு புகார் வந்தது.
samayam tamil

இதுதொடர்பான வாட்ஸ்-அப் சாட்டிங்கின் ஆதாரங்களும் காட்டப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. புகார் தொடர்பாக விசாரித்து வருகிறோம். ஊரடங்கு நாட்களில் தான் இந்த சாட்டிங் சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது என்றார். மேலும் சுரு நகர எஸ்.பி தேஜஸ்வினி கவுதம் கூறுகையில், வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
samayam tamil

இந்த சூழலில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் சுனில் சவுத்ரி சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், மருத்துவமனை ஊழியர்களின் சாட்டிங் விஷயத்தில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கோ அல்லது எனது மருத்துவமனை ஊழியர்களுக்கோ எந்தவொரு சமூகத்தையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை.

அனைவருக்கும் நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார். இதுபற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசிய சுனில் சவுத்ரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறேன். எந்தவொரு மதத்தினருக்கும் சிகிச்சை அளிக்க மறுத்ததே இல்லை. முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் சிகிச்சை அளித்த ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக