Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 8 ஜூன், 2020

சிக்னல் படுத்தும்பாடு இதுதான்.! வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த மாணவி.! பின்பு நடந்தது என்ன?

பல்வேறு இடங்களில் செல்போன் சிக்கனல் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கறது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக கிராமங்களில் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டக்கலை அடுத்த அரீக்கல் என்னும் பகுதியை சேர்ந்தவர் நமீதா நராயணன். இந்த பெண் BA ஆங்கிலம் படித்து வரும் நிலையில்

லாக்டவுன் காரணமாக ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுத்து தனது பாடங்களை கற்று வருகிறார்.

ஆனால் இவர் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்க தேர்வு செய்த இடம் தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, அதாவது வீட்டில் சரியாக சிக்னல் கிடைக்காத நிலையில் வீட்டின் மேற்கூறையில் சில மணி நேரம் உட்கார்ந்து கற்று வந்துள்ளார்.

வீட்டின் பல பகுதிகளில் எங்கும் சிக்னல் கிடைக்காத நிலையில், வீட்டின் மேற்கூரையை நமீதா தேர்வு செய்துள்ளார். மேலும்அவர் கூறியது என்னவென்றால், வீட்டின் அனைத்து பகுதிகளிலும் உட்கார்ந்து படித்தேன் ஆனால் எங்கும் சிக்னல் சரிவர கிடைக்கவில்லை. அதனால் வீட்டின் மேற்கூரையை தேர்வு செய்தேன் என அவர் தெரிவித்தார்.

பின்பு இந்த தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, தனியார் இன்டர்நெட சேவை நிறுவனம் ஒன்று நமிதா வீட்டிற்கு சென்று அவருக்கு அதிவேக இன்டர்நெட் சேவையை வீட்டிற்குள்ளேயே கிடைக்கும்படி உதவி செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து அந்த மாணவி மிகவும் மகிழ்சியடைந்துள்ளார், மேலும் இதேபோல பல மாணவ மாணவிகள் இன்டர்நெட் சேவை சரிவர கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் நமீதா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு தடைகளை தாண்டி கல்வி கற்றி நினைத்த அந்த மாணவிக்கு அப்பகுதி எம்.எல்.ஏ மற்றும் எம்.பி ஆகியோர் தங்களது

பாரட்டுகளை தெரிவித்துள்ளனர். ஆன்லைன் வகுப்புகளில் கற்றுக் கொள்ள தனது முன்பிருந்த தடைகள் அனைத்தும் தாண்டி கல்வி கற்க வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்ட அந்த கல்லூரி மாணவிக்கு பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக