9 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை
ராஜஸ்தானின், கோட்டா என்ற இடத்தில் உள்ள காந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இச்சிறுவனின் தந்தை ராணுவத்தில் பணிபுரிகிறார், சிறுவன் சனிக்கிழமை அதிகாலை தனது படுக்கையறையில் உள்ள வென்டிலேட்டரின் கிரில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காலையில் குடும்பத்தினர் இவரைச் சடலமாகப் பார்த்துள்ளனர்
ஸ்மார்ட்போனில்மூன்று நாட்களுக்கு முன்பு தான் PUBG பதிவிறக்கம்
வீட்டின் படுக்கையறை கிரில்லில் மாணவனின் சடலம் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகக் கோட்டா ரயில்வே காலணி காவல் நிலைய பொறுப்பாளர் ஹன்ஸ்ராஜ் மீனா தெரிவித்துள்ளார். சிறுவனின் குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, சிறுவன் தனது தாயின் ஸ்மார்ட்போனில் மூன்று நாட்களுக்கு முன்புதான் கேமிங் புரோகிராமை பதிவிறக்கம் செய்திருக்கிறான். ஆனால், கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து PUBG கேமை விளையாடி வந்துள்ளான்.
அதிகாலை 3 மணி வரை விளையாட்டு
சிறுவன் நள்ளிரவு முழுதும் தொடர்ச்சியாக விளையாடியுள்ளார், அவரின் சகோதரர் படிக்கும் அறையில் அதிகாலை 3 மணி வரை விளையாடுவதைப் பழக்கமாகியுள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எப்பொழுதும் போல கேம் விளையாடி முடித்துவிட்டுத் தூங்குவதற்குப் படுக்கையறைக்குச் சென்றிருக்கிறான். ஆனால், காலையில் அவரின் உடல் வென்டிலேட்டரின் கிரில்லில் தொங்கிய நிலையில் காணப்பட்டதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ந்துவிட்டனர்.
தற்கொலைகுறிப்பு
சிறுவன் அருகிலிருந்த கோட்டா எம்.பி.எஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார், அங்கு அவர் 'இறந்துவிட்டார்' என்று மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தற்கொலை குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
வேறு ஏதேனும் காரணமா?சிறுவனின் தந்தை தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் என்றும், தற்பொழுது ஆந்திராவில் இராணுவ பணியில் பணிபுரிந்து வருகிறார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. சிறுவனின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்று காவல்துறை தனது விசாரணையைத் துவங்கியுள்ளது. சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக