சென்னையில் 19 கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்ற அரசு திட்டம்.
தமிழகத்தில் நேற்று 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று மட்டும் 1,156 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 22,149 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் 19 கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்ற அரசு திட்டம். தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டுமே இனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்படும்.
இந்த பராமரிப்பு மையங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக