பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நேற்று(புதன்கிழமை) சிறப்பு கட்டண வவுச்சர் திட்டமான எஸ்டிவி ரூ.99 திட்டத்தில் மாற்றம் செய்து அறிவித்தது. பிஎஸ்என்எல் வழங்கும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்போடு வழங்குகிறது. அதோடு இலவச தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன் சேவையும் வழங்குகிறது.
பிஎஸ்என்எல் தமிழ்நாடு பதிவிட்ட டுவிட்
பிஎஸ்என்எல் தமிழ்நாடு பதிவிட்ட டுவிட் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிஆர்பிடி சந்தாவாக ஒவ்வொரு பாடல் தேர்வுக்கும் 30 நாட்களுக்கு ரூ.30 வசூலிக்கப்படுகிறது. எஸ்டிவி 99 திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்போடு வருகிறது.
பி.எஸ்.என்.எல் எஸ்டிவி 99
பி.எஸ்.என்.எல் எஸ்டிவி 99 திட்டத்தை வரம்பற்ற குரல் அழைப்பு வசதியுடன் வழங்குகிறது. ரூ.99 விலையுள்ள எஸ்.டி.வி 99 திட்டம் பயனர்களுக்கு 22 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்ற பயன்பாட்டு வரம்பு நிலை குரல் அழைப்புகளை மேற்கொள்ள உதவுகிறது. பயனர்கள் 250 நிமிட பயன்பாடு நிறைவுபெற்ற பிறகு அடிப்படை கட்டணம் வசூலிக்கப்படும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
எஸ்டிவி 99 திட்டம் கிடைக்கும் பகுதி
எஸ்டிவி 99 திட்டம் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், சண்டிகர், சென்னை, குஜராத், கோவா, ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட பல வட்டங்களில் கிடைக்கிறது.
பி.எஸ்.என்.எல் பயனர்களுக்கு இந்த திட்டம்
கூடுதலாக, கர்நாடகா, கொல்கத்தா, லடாக், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், புதுச்சேரி, ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா, உ.பி. கிழக்கு, உ.பி. மேற்கு, உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் பயனர்களும் இந்த திட்டம் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.78-திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.78-திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது, பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 8நாட்கள் ஆகும். மேலும் எஃப்யூபி வரம்பை எட்டும்போது இணைய வேகத்தை 80 கே.பி.பி.எஸ் ஆக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு தினசரி 250 நிமிடங்கள் FUP வரம்பிலான அழைப்புகள், 8 நாட்களுக்கு ஈரோஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் சேவைகளுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
பிஎஸ்என்எல் ரூ.247-திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது, பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30நாட்கள் ஆகும். மேலும் தினமும் 3 ஜிபி டேட்டா வரம்பு தீர்ந்த பின்னர் 80 கே.பி.பி.எஸ் ஆக வேகம் குறையும். பின்பு தினசரி 100எஸ்;எம்எஸ், நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் என்ற எஃப்யூபி வரம்புடனான அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ.997-திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வவுச்சர் (பிவி) 997 திட்டத்தை முதல் ரீசார்ஜ் கூப்பனாக (எஃப்ஆர்சி) பயன்படுத்தலாம். தினசரி இந்த திட்டத்தில் 3ஜிபி டேட்டா கிடைக்கும் மேலும் 180நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த அட்டகாச திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்புகள் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்ற எஃப்யூபி வரம்பைக் கொண்டுள்ளன. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், பெர்சனலைஸ்டு ரிங் பேக்டோன் (பிஆர்பிடி) சேவையின் கீழ் இரண்டு மாத இலவச காலர் ட்யூன் உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக