Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 11 ஜூன், 2020

கொரோனா வார்டில் மலர்ந்த காதல்: டாக்டர்கள், நர்ஸ்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரானோ வார்டில் ஒரு காதல் மலர்ந்துள்ள தகவல் அந்த வார்டில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
 
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒன்றில் கொரோனா வார்டில் பலர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தனர். அந்த வார்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திடீரென காதல் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக பழகிய அவர்கள் இருவரும், தங்கள் குடும்ப கதைகள், சொந்த கதை, சோக கதை ஆகியவற்றை பேசியுள்ளனர். அதன் பின் இருவருக்கும் மனதுக்குப் பிடித்துப் போய் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது
 
இதனை முதலிலேயே கவனித்த அங்கு பணிபுரியும் நர்சுகள் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சமீபத்தில் திடீரென இந்த காதல் ஜோடி மாயமாகி விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நர்சுகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை தேடியபோது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு மறைவான இடத்தில் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை எச்சரித்து நர்ஸ்கள் மற்றும் டாக்டர்கள் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் 
 
கொரோனா திடீரென இளம்பெண் ஒருவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக