தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப் (சாதம் உதிரியாக)
பெரிய கேரட் - 3 (துறுவியது)
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
மிளகாய் - 3
மஞ்சள் - சிறிது
கருவேப்பிலை, பட்டை - சிறிதளவு
கடுகு, உளுந்து. கடலை பருப்பு - தாளிப்பதற்கு ஏற்ப
செய்முறை:
அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து சாதம் வடித்து, உதிரியாக தயார் செய்து கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து விட்டு பிறகு மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பின்னர் துருவிய கேரட்டை கொட்டி 50 மில்லி தண்ணீர் சேர்த்து கிளரி உப்பு சேர்த்து வேக விடவும். சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கி சாதத்துடன் சேர்த்து கிளரினால் சுவையான கேரட் சாதம் தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக