Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 22 ஜூன், 2020

IMMUNITY அதிகரிக்க கஷாயம் குடிக்கிறீர்களா? அப்படியானால் இதை அவசியம் படியுங்கள்!!


நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க கஷாயம் குடிக்கும் போது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று ஒரு பழமொழி உண்டு. கஷாயத்தை தேவைக்கு அதிகமாக குடிக்கும் போது, சில பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

புது தில்லி: கொரோனா வைரஸ் (Coronavirus) பரவி வரும் நிலையில், மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க கஷாயம் குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது. அந்த கஷாயத்தை (Kashayam) நீங்கள் அதிக அளவு குடித்தால், மூக்கில் இருந்து இரத்தம் வருதல், கொப்புளங்கள், வயிற்றில் எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படுதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உட்பட பல பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சில மாநிலங்கள், இஞ்சி மிளகு சேர்த்த கஷாயம் (Kashayam Free) இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. சிலர் இதில் இன்னும் சில மருந்து பொருட்களை சேர்த்து கஷாயம் தயாரிக்கிறார்கள். ஆனால், இது நமது உடலுக்கு நன்மையா? அல்லது பக்க விளைவுகள் ஏற்படுத்துமா? என்பதில் அதிக கவனம் தேவை. தேவைக்கு அதிகமான அளவில் கஷாயம் குடிக்கும் போது, அது மேற்கூறிய சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.


அனைத்திந்திய ஆயுர்வேத கழகத்தின் (AIIA) தலைமை இயக்குநர் தனுஜா நேசாரி, சூட்டை ஏற்படுத்தக் கூடிய கஷாயத்தை அதிகம் குடிக்கும் போது, மூக்கில் இருந்து இரத்தம் வருதல், கொப்புளங்கள், வயிற்றில் எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படுதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனக்கூறுகிறார். 

அதனால், ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த அடிப்படையில், கஷாயத்தை பருகும் போது, சரியான அளவு பொருட்களை கொண்டு கஷாயம் தயாரித்து அருந்த வேண்டும். அதேநேரத்தில் இந்த கஷாயம் சூட்டை கிளப்பாமல் இருக்க, ஏலக்காய், அதிமதுரம் ஆகியவற்றை சேர்க்கலாம். கஷாயத்தை நீர்க்க செய்து பருகலாம். இது தவிர கஷாயத்தை அதிக நேரம் கொதிக்க வைக்க வேண்டாம். இதன்மூலமும் பக்க விளைவுகளை தவிர்க்க முடியும்.
 

இருமல் இருக்கும் போது, அதிகம் கஷாயம் (Kashayam) குடித்தால் பரவாயில்லை. எனினும் பித்த சரீரம் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
 
ஒருவேளை பக்க விளைவுகள் (Kashayam Side Effects) ஏற்பட்டால், அதாவது வாயில் கொப்புளங்கள் அல்லது புண் ஏற்பட்டால், ஏலக்காய் அல்லது வெற்றிலையை மென்று சாப்பிடலாம். மோர் குடிக்கலாம் மற்றும் நல்ல எண்ணெய் தடவலாம்.


கொரோனா பரவத் தொடங்கியதுமே, ஆயுஷ் அமைச்சகம் கஷாயம் குடிப்பதற்கு (Kashayam Benefits) பரிந்துரைத்தது. ஆனால், இது மருந்து அல்ல, நோய் வராமல் தடுக்க உதவும் என்று கூறியிருந்தது. அதனால், கஷாயம் குடிக்கும் போது, இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் வைத்துக் கொண்டால், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக