முழு
அடைப்பு அன்லாக் 1.0-ன் முதல் நாளில் நாடு முழுவதும் LPG சிலிண்டர்களின் விலை
மீண்டும் உயர்வு கண்டுள்ளது. LPG சிலிண்டர் விலையில் இந்த உயர்வு உலகளாவிய
விகிதங்களின் அதிகரிப்புக்கு மத்தியில் வருகிறது என வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
LPG
சிலிண்டரின் விலை அதிகரிப்பு மூன்று மாதங்கள் தொடர்ச்சியான விகிதக்
குறைப்புகளுக்குப் பிறகு வருகிறது. இதனையடுத்து டெல்லி சந்தையில் LPG சிலிண்டரின்
விலை சிலிண்டருக்கு ரூ.1150-ஆக அதிகரித்துள்ளது என்று இந்தியன் ஆயில்
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து
இந்தியன் ஆயில் கூறுகையில், "2020 ஜூன் மாதத்தில், LPG-ன் சர்வதேச விலையில்
அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விலைகள் அதிகரிப்பதால், டெல்லி
சந்தையில் LPG-ன் RSP(சில்லறை விற்பனை விலை) அதிகரிக்கும், ஒரு சிலிண்டருக்கு ரூ
.1150 வரை உயர்வு கண்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
2020
மே மாதத்தில் டெல்லி சந்தையில் LPG-ன் விற்பனை விலை சர்வதேச விலைகள் வீழ்ச்சிக்கு
ஏற்ப அனைத்து நுகர்வோருக்கும் சிலிண்டருக்கு ரூ .744 ல் இருந்து 581.50 ரூபாயாக
குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது.
சமீபத்திய
விகிதங்களின் அதிகரிப்புக்குப் பிறகு, மானியமில்லாத 14.2 கிலோ இந்தேன்
சிலிண்டருக்கு பின்வரும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லி
- ரூ 593
மும்பை
- ரூ. 590.50
கொல்கத்தா
- ரூ .616
சென்னை
- ரூ .606.50
LPG
சிலிண்டர் விகிதங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் திருத்தப்படுகின்றன,
மேலும் இது LPG பெஞ்ச்மார்க் மற்றும் ரூபாயின் மதிப்பைப் பொறுத்தது. LPG சிலிண்டர்
விலையில் இந்த அதிகரிப்பு பிரதான் மந்திரி உஜ்வாலா (PMUY) பயனாளிகளை பாதிக்காது
என்று இந்தியன் ஆயில் தெளிவுபடுத்தியது. இந்த பயனாளிகள் பிரதான் மந்திரி கரிப்
கல்யாண் திட்டத்தின் கீழ் வந்து ஜூன் 30 வரை இலவச சிலிண்டர்களுக்கு
தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே
31-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு மாத பூட்டப்பட்ட காலத்தில் பெட்ரோல் மற்றும்
டீசல் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பினும், LPG சிலிண்டர்களுக்கு இந்த
காலகட்டத்தில் தேவை அதிகரித்தது. சமையல் எரிவாயு LPG உண்மையில், கடந்த ஆண்டின் இதே
காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, மே முதல் பாதியில் நுகர்வு 24 சதவீதம்
அதிகரித்து 1.2 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக