Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 ஜூன், 2020

இந்த மேட்டர் தெரிஞ்சா Vodafone-Idea சிம் கார்டை தூக்கிப் போட்ருவீங்க!

Vodafone Idea


பயனர்களின் அக்கவுண்ட்டில் இருந்து 99 ரூபாயாக எடுத்து 3,400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக புகார்!

ஏற்கனவே பல சிக்கல்களில் சிக்கி தவிக்கும் வோடபோன்-ஐடியா நிறுவனமானது "பயனர்களின் கோபம்" என்கிற மற்றொரு பெரிய சிக்கலில் மூழ்கிக்கொண்டிருப்பதாக இருப்பதாக தெரிகிறது, ஏனெனில் பல பயனர்கள் இது தங்கள் அக்கவுண்டில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் பணம் கழிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறியுள்ளனர்.

பயனர்கள் இந்த பிரச்சினையை ட்விட்டர் வழியாக எழுப்பியுள்ளனர். எதற்காக பணம் கழிக்கப்பட்டது? எவ்வளவு கலைக்கப்பட்டது? ஏற்கனவே மெல்ல மெல்ல பயனர்களின் எண்ணிக்கையை இழந்துவரும் வோடாபோன் நிறுவனத்திற்கு இதுவொரு பெரிய தலைவலியாக மாறுமா? ட்விட்டர் வழியாக பயனர்கள் அப்படி என்னதான் சொல்கிறார்கள்?

ட்விட்டர் பயனரின் அந்த ட்வீட் பின்வருமாறு: "சில சர்வதேச ரோமிங் வாடகை சேவைக்காக எனது தந்தையின் ப்ரீபெய்ட் கணக்கிலிருந்து ரூ.99 கழிக்கப்படுகிறது, அதுவும் எந்த முன் அனுமதியோ அல்லது அறிவிப்புகளோ இல்லாமல். இதன் விளைவாக, பேலன்ஸ் தொகை மைனஸ் ஆகி, ஒரு அன்லிமிடெட் திட்டத்தை ஆக்டிவ் பிளானாக வைத்திருக்கும்போதும் கூட எஸ்எம்எஸ் சேவை முடக்கப்பட்டுள்ளது.இந்த சிக்கலை கூடிய விரைவில் தீர்க்கவும்."

இருப்பினும், வோடாபோன் ஐடியா நிறுவனம் இந்த நிகழ்விற்காக மன்னிப்பு கோரியுள்ளது மற்றும் இது சில தொழில்நுட்ப குறைபாடு காரணமாக நிகழ்ந்து இருப்பதாகவும் கூறி உள்ளது. "ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். தொழில்நுட்ப பிழை காரணமாக, உங்கள் ப்ரீபெய்ட் எண்ணில் இருந்து ரூ.99 தவறாக வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை உங்கள் கணக்கில் மீண்டும் வரவு வைக்கிறோம். உங்கள் ஒத்துழைப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். வீட்டிலேயே இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள்" என்று வோடபோன்-ஐடியா நிறுவனம் அதன் ட்விட்டர் அக்க்வுண்ட் வழியாக அறிவித்துள்ளது.

பல பயனர்கள் தங்கள் அனுமதியின்றி தங்கள் வோடாபோன் ஐடியா அக்கவுண்டில் இருந்து பணம் கழிப்பதைப் பற்றி அறிக்கை செய்த பின்னர் இந்த வோடாபோன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மறுபுறம், ஸ்டாக் டாக் என்ற ட்விட்டர் அக்கவுண்ட் ஆனது "வோடாபோன் நிறுவனம் இந்த சம்பவத்தின் வழியாக 3,400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ரூ.99 என்கிற தொகை சிறியதாகத் தெரிகிறது, ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவில் செய்தால் அது மிகப்பெரியது" என்றும் அந்த ட்வீட் கூறுகிறது.

ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் அட்டகாசமான இலவச சலுகைகளுக்கு மயங்காத சிலரும், குறிப்பிட்ட நன்மைகள் வோடபோன் ஐடியா சேவையின் கீழ் தான் கிடைக்கிறது என்கிற காரணத்தினால் சிலரும், பழக்கத்திற்காக இன்னமும் இரண்டாவது சிம் கார்ட் ஆக வோடாபோன் ஐடியாவை பயன்படுத்தும் சிலரும் தான் இந்த சேவையின் கீழ் இருக்கிறார்கள். அவர்களையும் இப்படி அவ்வப்போது வெறுப்பேற்றினால்.. என்ன நடக்கும் என்பதை வோடாபோன் ஐடியா நிறுவனம் கவனத்தில் கொள்ளுமா? பார்க்கலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக