Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 ஜூன், 2020

வாங்காத பொருளுக்கு பில்... திருட்டு பில் போடுகிறதா PDS

PDS கோப்புப்படம்

வாங்காத ரேஷன் பொருட்களை வாங்கியதாக பில் போட்டுள்ளது பி.டி.எஸ். நிர்வாகம்

நாடு முழுக்க கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 மாதமாக ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில் இன்று முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஏராளமான தளார்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் வெளி மாவட்டங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

இதற்கிடையில், வாங்காத ரேஷன் பொருட்களுக்கு பில் கட்டப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்ததாவது, “ பொது வழங்கல் சேவை (பி.டி.எஸ்.) சார்பில் கோயம்புத்தூரில் உள்ள எங்கள் ரேஷன் கடையிலிருந்து பொருட்கள் வாங்கியதாக இன்று என் தந்தைக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால், பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து என் பெற்றோர் சென்னையில் இருக்கின்றனர். அப்படி இருக்க இது எப்படி சாத்தியம் ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், நேரடியாக உணவுத்துறை அமைச்சர் காமராஜையுன் இந்த ட்வீட்டில் இணைத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டவிரோதமாக செயல்படும் உணவு பொருட்கள் திருட்டைத் தடுப்பதற்காகத்தான் பி.டி.எஸ். மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், குறுஞ்செய்திகளை பலர் கவனிப்பதில்லை. இதனைப் பயன்படுத்தி வாங்காத பொருட்களை வாங்கியதாகக் கணக்கு காட்டி சட்டவிரோத வணிகம் நடைபெறுவது தொடர்ந்து வருகிறது.

யாருமே போய் பொருட்களை வாங்காத போது யாருக்காக இந்த பில் போடப்பட்டது? என்ற கேள்வி இந்த விவகாரத்தின் குவிமையமாக இருக்கிறது. இத்துடன் இது முதல்முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.


பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரையிலான கால இடைவெளிக்குள், இரண்டாவது முறையாக இந்த குறுஞ்செய்தி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

விளையாட்டாகக் கடந்துவிடக்கூடிய செய்தி அல்ல இது. குறைந்தபட்சம் இதற்கு ஒரு பொறுப்பான பதிலை எதிர்பார்ப்பதாக லட்சுமி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். நியாயமான் இவரது கோரிக்கைக்கு உரிய பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு குறிப்பாக உணவுத்துறைக்கும் துறை அமைச்சருக்கும் உள்ளது.

இந்தியாவின் மாநிலங்களில் தமிழ்நாடு பல விதங்களில் முன்னணி மாநிலமாக இருப்பதற்கான காரணங்களில் தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்ட முறை குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இவ்வளவு எளிமையாக மக்களை ஏமாற்றிச் சட்டவிரோதமாக பி.டி.எஸ். செயல்படுவது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரச்சினை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக