உலகில் ஒரு நொடியில் கண்டறியப்பட்ட அல்லது அழிந்த டாப்
10 விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
பிரபஞ்சம் என்பது உருவான போதே காலமும்
உருவானது என கூறுகிறார் விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். அதற்கு பிறகே
நட்சத்திரங்கள் பிறக்கின்றன. இறக்கின்றன. பில்லியன் கணக்கான ஆண்டுகளாக இந்த
நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கின்றன.
இப்படியான இந்த காலம் நிமிடம், மணி நேரம் மற்றும் நொடிகள் என்னும் கால அளவுகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. கால அளவில் ஒரு நொடிக்கும் குறைவான காலத்தில் நடந்த முக்கியமான 10 விஷயங்களை நாம் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
இப்படியான இந்த காலம் நிமிடம், மணி நேரம் மற்றும் நொடிகள் என்னும் கால அளவுகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. கால அளவில் ஒரு நொடிக்கும் குறைவான காலத்தில் நடந்த முக்கியமான 10 விஷயங்களை நாம் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
10.பேரழிவு- மெசோசோயிக் சகாப்தத்தின் முடிவு:
66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
மெசோசோயிக் என்னும் சகாப்தம் இருந்தது. ஆனால் இது மனித இனம் உருவாவதற்கு முன்பே
அழிந்தது. இது பூமியின் மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. ஒரு மலை அளவில்
உள்ள சிறிய கோள் பூமியை நோக்கி வந்துக்கொண்டிருந்தது.
அது ஒரு மணி நேரத்திற்கு 40,000 மைல்
வேகத்தில் பூமியை நோக்கி வந்து இறுதியில் பூமியை மோதியது. 100 ட்ரில்லியன் டன்
டி.என்.டி (வெடிக்கும் வேதிப்பொருள்) வெடித்தால் பூமிக்கு எவ்வளவு சேதம் ஏற்படுமோ
அவ்வளவு பெரிய சேதத்தை அந்த கோள் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஜோனா மோர்கன் என்னும் விஞ்ஞானியின்
கூற்றுப்படி சில நொடிகளில் பாதிப்பு ஏற்ப்பட்ட இடத்திலிருந்து 600 மைல்
தூரத்திற்கு அனைத்தும் அழித்து போயிருக்கும். அதாவது நமது கண் இமைக்கும்
நேரத்திற்குள் இந்த உயிர் கோளில் ஒரு மிக பெரிய அழிவு ஏற்ப்பட தொடங்கியிருக்கும்.
இந்த அழிவு உடனே நின்றுவிடவில்லை.
இதன் பாதிப்பு பல காலமாக பூமியில் இருந்தது. இதனால் டைனோசர் என்னும்
விலங்கினத்தோடு சேர்த்து பூமியில் அப்போது இருந்த 75 சதவீத உயிரினங்கள் அழிந்தன.
09.யுரேகா சிந்தனை
ஆர்க்கிமிடிஸ் என்னும் பிரபல அறிஞர்
குளிக்கும்போது நிர்வாணமாக எழுந்து வந்தார் என்பது அனைவரும் அறிந்த பிரபலமான
விஷயமாகும். ஆனால் அவர் ஏன் அப்படி செய்தார் என அதிக பேருக்கு தெரியாது. அவர்
அப்போது ஒரு கிரீடம் திடமான தங்கத்தால் ஆனதா? என்பதை கண்டறியும் ஆராய்ச்சியில்
இருந்தார்.
அவர் குளிக்கும்போது அவருடைய எடைக்கு
சமமான அளவு நீர் வெளியாவதை கண்டார். அதன் மூலம் அவரது பிரச்சனைக்கு தீர்வு
கிடைத்தால் நிர்வாணமாகவே அவர் தெருக்கள் வழியாக அந்த விஷயத்தை ஆராய சென்றார்.
அவர் தனது ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
மூலம் தங்கத்தின் அளவை கண்டுப்பிடித்தார். இப்படியாக குளியல் அறையில் அவருக்கு
தோன்றிய அந்த சிந்தனை யுரோகா தருணம் என்று அழைக்கப்படும். அந்த சமயத்தில் மூளை
வினைப்புரிந்து உடலுக்கு தகவல்களை அனுப்ப 300 முதல் 500 மில்லி விநாடிகளே நேரம்
எடுக்குமாம்.
நீங்கள் உங்கள் வாழ்வில் பகல் கனவு
காணும்போது அல்லது உங்களுக்கு பெரிய கண்டுப்பிடிப்பு குறித்த சிந்தனை தோன்றும்போது
இதே போன்ற நிகழ்வு உங்கள் மூளையிலும் ஏற்படும்.
08.லிங்கனை கொன்ற குண்டு
அமெரிக்க அதிபர்களில் மிகவும் புகழ்
பெற்றவர் ஆபிரகாம் லிங்கன். கருப்பின மக்களுக்கு விடுதலை பெற்று தந்ததால் அவர்
புகழ் வாய்ந்தவரவாக பார்க்கப்படுகிறார்.
14 ஏப்ரல் 1865 ஆம் ஆண்டு ஆபிரகாம்
லிங்கனும் அவரது மனைவியுடன் “அவர் அமெரிக்கன் கசின்” என்னும் நிகழ்ச்சியை போர்ட்
திரையரங்கில் பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவரை ஒருவர் 44 காலிபர்
டெர்ரிங்கர் பிஸ்டல் என்னும் வகையை சேர்ந்த துப்பாக்கியால் தலையின் பின்புறத்தில்
சுட்டார். அந்த குண்டானது அவரது மரணத்திற்கு வழி வகுத்தது.
500 முதல் 700 அடிவரை உள்ள இலக்கை
தாக்க கூடிய அந்த குண்டின் தாக்கும் வேகம் என்பது ஒரு விநாடியில் ஆயிரத்தில் ஒரு
பங்கு ஆகும்.
07.எடிசனின் விளக்கு
உலகில் பல காலமாக பலர் மின் விளக்கை
கண்டுப்பிடித்தது தாமஸ் ஆல்வா எடிசன் என நினைத்து கொண்டு உள்ளனர். உண்மையில்
மின்சாரத்தினால் இயங்கும் விளக்கை முதலில் கண்டுப்பிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்
இல்லை.
முதன் முதலில் மின்சார விளக்கை
கண்டுப்பிடித்தவர் ஹம்ப்ரி டேவி என்பவர்தான். ஹம்ப்ரி ஆர்க் விளக்கு என்னும்
மின்சார விளக்கை கண்டுப்பிடித்தார். ஆனால் அது நீண்ட நேரத்திற்கு எரியவில்லை.
பிறகு 1874 ஆம் ஆண்டு டொராண்டோ மின்சார வல்லுநர்கள் நைட்ரஜன் நிரப்பப்பட்ட கண்ணாடி
சிலிண்டரில் மின் முனைகளை கார்பன் கம்பிகளை வைத்து கடத்துவதன் மூலம் வெளிச்சத்தை
வர வைக்கலாம் (தற்போதைய மின்விளக்குகள்) என கண்டறிந்தனர்.
அவர்களால் அந்த விளக்கை விற்க
முடியவில்லை. எனவே அதன் காப்புரிமையை அவர்கள் தாமஸ் ஆல்வா எடிசனிடம் விற்றனர். 31
டிசம்பர் 1879 ஆம் ஆண்டு எடிசன் ஒரு சுவிட்சை உருவாக்கினார். இதனால் ஒளியின்
வேகத்தில் அந்த கம்பிகள் மேல் மின்சாரம் ஓடியது. (அதாவது வினாடிக்கு 1,86,000 மைல்
வேகத்திற்கு).
140 ஆண்டுகளுக்கு முன்பு
கண்டுப்பிடிக்கப்பட்ட மின்விளக்குகள் ஒன்று அல்லது இரண்டு வினாடி எரிந்து
இருந்தாலும் தீ மூலம் மட்டுமே வெளிச்சத்தை பார்த்து வந்த மனித இனத்தின் வரலாற்றை
மாற்றிய நொடிகளாக அவை பார்க்கப்படுகின்றன.
06.வானொலி- வயர்லெஸ் செய்தி
சாமுவேல் மோர்ஸ் என்பவர் அவரது தனி
மொழியான மோர்ஸ் கோட் எனும் மொழியை பயன்படுத்தி ஒரு பேட்டரி,கம்பி மற்றும் அதற்கான
ரிசீவர் நிலையங்களை கொண்டு தந்தி முறையை கொண்டு வந்தார்.
மார்க்கோனி தனது கம்பி இல்லா தந்தி
முறையை கொண்டு வருவதற்கு முன்பு 50 ஆண்டுகளாக மோர்ஸின் தந்தி முறையே பயன்பாட்டில்
இருந்தது. மார்க்கோனியின் தந்தி முறை வந்த பிறகும் கூட மோர்ஸ் கோடை கொண்டே
தந்திகள் அனுப்பப்பட்டன.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில்
அட்லாண்டிக் முழுவதும் கம்பியில்லா தந்தி முறையை அறிமுகப்படுத்தினார் மார்க்கோனி.
முதலில் 1984 இல் தனது தந்தி முறையை அவர் தொடங்கியபோது குறுகிய தூரங்களுக்கு இடையே
தந்திகளை அனுப்பி வந்தார்.
1899 இல் தனது ஆராய்ச்சியை துவங்கிய
மார்க்கோனி இறுதியில் 12 டிசம்பர் 1901 ஆம் ஆண்டு கனடாவில் இருந்துக்கொண்டு
இங்கிலாந்திர்க்கு செய்தி அனுப்பினார்.
அவர் மார்ஸ் கோடை பயன்படுத்தி இரண்டு
எழுத்துக்களை அனுப்பி இருந்தார். அவரது சிக்னல்கள் அயனி மண்டலம் வழியாக பயணித்து
கனடாவை நோக்கி சென்றது. அந்த வானொலி அலைகள் ஒளியின் வேகத்தில் பயணித்தன.
05.ஹீரோஷிமா நாகசாகி குண்டுவெடிப்பு
1945 ஆம் ஆண்டு அமெரிக்கா ஜப்பான்
மீது இரண்டு குண்டுகளை போட்டது. அவை ஜப்பானில் உள்ள ஹீரோஷிமாவில் லிட்டில் பாய்
மற்றும் நாகசாகியில் ஃபேட் மேன் என்னும் குண்டுகள் சென்று விழுந்தன. அந்த இரண்டு
குண்டுகள் இரண்டாம் உலக போரின் போக்கையே மாற்றின.
அவை மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தின.
லிட்டில் பாய் ஆனது யுரேனியத்தை எரிப்பொருளாக கொண்ட குண்டு. அது வெடித்து சுமார்
13 கிலோ டன் சக்தியுடன் வெடித்தது
ஃபேட்மேன் குண்டானது
புளூட்டோனியத்தால் இயக்கப்படும் அணுக்குண்டாகும். ஒரு நியுட்ரான் கதிரியக்க
பொருளின் அணுக்கருவுடன் மோதுகையில் அணுவின் ஆற்றல் வெளியாகிறது. ஒரு நியுட்ரான்
அணுவில் பயணிக்கும்போது அதன் செயல்முறை வேகம் கணக்கிடப்பட்டது.
அதன் செயல்முறை ஒரு மைக்ரோ விநாடியில்
நிகழ்கிறது என தெரிந்தது. இயற்பியலாளர்கள் அதற்கு “குலுக்கல்” என்று செல்லப்பெயர்
வைத்தனர். ஏனெனில் ஒரு ஆட்டுக்குட்டி தனது வாலை குலுக்க ஆகும் நேரமே இந்த அணு
ஆற்றல் வெளியாகவும் ஆகிறது.
அதாவது ஆட்டுக்குட்டி தனது வாலை
இரண்டு முறை குலுக்கும் நேரத்தில் ஹீரோஷிமாவில் 60,000 முதல் 80,000 பேரும்,
நாகசாகியில் 40,000 பேரும் எரிந்து போனார்கள்.
04.ட்ரான்சிஸ்டரின் வேகம்
ட்ரான்சிஸ்டர் என்பது 1947 இன்
பிற்பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது 20 ஆம் நூற்றாண்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
கண்டுப்பிடிப்பாளர்களான வில்லியம் ஷாக்லி, ஜான் பார்டீன் மற்றும் வால்டர்
பிராட்டெய்ன் ஆகியோர் தனது முயற்சிகளின் காரணமாக இறுதியில் நோபல் பரிசை பெற்றனர்.
ஜெர்மானியம் (ஒரு உலோகம்)
ட்ரான்சிஸ்டரின் மாறுதல் வேகமானது 60 ஜிகாஹெட்ஸ் இருந்தது. அதாவது 20 நானோ
விநாடிகளில் அது மாறுதல் அடைந்தது.
அதன் பிறகு அவை புதுப்பிக்கப்பட்டன.
ட்ரான்சிஸ்டர் ஜெர்மானியத்தில் இருந்து சிலிக்கானுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு
டிஜிட்டல் ட்ரான்சிஸ்டர் உருவாக்கப்பட்டது. இதனால் டிரான்சிஸ்டரின் திறன்களில்
மேம்பாடு ஏற்பட்டது. இன்று நாம் பயன்படுத்தும் ட்ரான்சிஸ்டர் அதிசயம் தரும்
வகையில் 800 ஜிகாஹெட்ஸ் அல்லது அதற்கு அதிகமான செயல்திறனை கொண்டது.
03.இணையத்தில் வந்த முதல் செய்தவர்
ARPANET எனும் நிறுவனம் 29 அக்டோபர்
1969 ஆம் ஆண்டு ஒரு சோதனையை செய்தது. UCLA (University of California, los angels)
பல்கலைகழகத்தில் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கி கணினிகள் வழியாக முதல் செய்தியை
அனுப்புனர்.
ஸ்டான்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் அந்த
செய்தியை பெற்றனர். அதில் லாகின் என்னும் வார்த்தைக்கு பதில் எல் ஒ என்ற இரண்டு
எழுத்துக்கள் மட்டுமே செய்தியாக வந்திருந்தன. பிறகு அவர்களது கணினி செயலலிழந்தது.
இரு பள்ளிகளும் தற்சமயம் சமீபத்தில்
செய்திகளை பரிமாறிக்கொள்ள செயலிகளையும் ரவுட்டர்களையும் நிறுவியுள்ளன.
ஸ்டான்போர்ட் இந்த நெர்வொர்க்கில் அதிவேக இணைப்பை கொடுத்துள்ளது. ஆனால் ஆரம்ப
கட்டத்தில் நெட்வோர்க் அவ்வளவு பிரமாதமாக இல்லை.
அங்கே இரு முனை நெட்வொர்க் முறை
இருந்தது. பள்ளியில் எந்த ஒரு கணினியை பயன்படுத்தும் எவரும் அடுத்த பள்ளியின்
கணினியில் உள்ள தரவுகளை பார்க்க முடியும். அதனுடைய தரவுகள் பெறப்படும் நேரம்
வினாடிக்கு 50 கிலோபிட் ஆகும்.
8 பிட்கள் ஒரு பைட் என அழைக்கப்படும்.
2 எழுத்துக்கு 16 பிட்கள் தேவைப்படும். ஆனால் வினாடிக்கு 50 கிலோபிட்
வேகத்தில்தான் தரவுகளை பெறமுடியும் என்பதால் அதிக நேரம் எடுக்கும். இணையத்தில் ஒரு
பக்கம் வருவதற்கு தாமதம் ஆனாலே நாம் கோபப்படுகிறோம். ஆனால் 1969 இல் மிக மிக
தாமதமாக அனைத்து தரவுகளும் பெறப்பட்டன.
02.தேடுப்பொறி முடிவுகள்
நாம்
எந்த ஒரு விஷயம் குறித்து இணையத்தில் தேடவும் கூகுள் எனும் இணையத்தள தேடல் தளத்தை
பயன்படுத்தி வருகிறோம். அதே போல 1990 இல் வந்த தேடல் தளம்தான் ஆர்ச்சி. இதுவே
இணையத்தில் வந்த முதல் தேடல் தளமாக பார்க்கப்படுகிறது.
இது
முதலில் வந்த தேடுபொறி என்பதால் அதன் தேடும் திறன் குறைவாகவே இருந்தது. அதன்பிறகு
அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் பல தேடுப்பொறிகள் வந்தன. ஆனால் அவையும் சரியாக
தகவல்களை தேடி தரும் வகையில் அமையவில்லை. அதன் பிறகு லைகோஸ், எக்ஸைட், அல்தாவிஸ்டா
மற்றும் அஸ்க் ஜீவ்ஸ் என பல தேடல் தளங்கள் உருவாகின.
வாடிக்கையாளர்கள்
தங்கள் தேடல் முடிவுகளை பெற பல நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. பிறகு
1990களின் பிற்பகுதியில் கூகுள் தேடுதல் தளம் களத்தில் குதித்தது. கூகுள் மற்ற
தேடுதல் தளத்தை காட்டிலும் புதிய வழிமுறைகளை பின்பற்றின.
அது
தனது தேடும் திறனை நவீனமாக்கியது. இதனால் இது ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில்
தேடல் முடிவுகளை வழங்குகிறது. டக் டக் கோ என்னும் தேடல் தளமும் வேகமானதுதான் ஆனால்
அது எப்படி வேகமாக செயல்படுகிறது என்பதை இதுவரை வெளிப்படுத்தியதே இல்லை.
01.சூப்பர் நோவா என்னும் அண்ட பெரு வெடிப்பு
இந்த
பிரபஞ்சம் முழுவதும் கோடிக்கணக்கான கோள்கள் உள்ளன. வான்வெளி ஆராய்ச்சியை மனித இனம்
தொடர்ந்து மேற்க்கொண்டு வருகிறது. பிரபஞ்சத்தில் இறக்கும் நிலையில் உள்ள கோள்களில்
வெடிப்பு நிகழும் போது அது சூப்பர் நோவா என அழைக்கப்படும்.
இவையே
புதுக்கோள்கள் உருவாகவும் காரணமாகின்றன. 1680 ஆம் ஆண்டு காசியோபியா ஏ என்னும் கோள்
வெடித்ததால் அதன் எச்சங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.
அதில்
கால்சியம், சிலிக்கான், இரும்பு மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை இருந்தன. சிறிய அளவில்
பாஸ்பரஸ், கார்பன், நைட்ரஜன், மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை இருந்தன. அங்கே டி.என்.ஏ
உருவாவதற்கான அனைத்து விஷயங்களும் இருந்தன.
நமது
முன்னோர்கள் காலத்தில் பூமிக்கு அருகிலேயே சூப்பர் நோவாக்கள் உருவாகியிருக்கலாம்.
அதனால் மரத்தில் வாழ்ந்த மனிதர்கள் புதிய சூழ்நிலைக்கு தன்னை மாற்றி
அமைத்துக்கொண்டு இருக்கலாம்.
கோர்
சரிவு என்பது சூப்பர் நோவாவில் மிகவும் பொதுவான ஒரு வகையாகும். சூரியன் 10 முதல்
50 வரை அதிகமான நிறையை அடையும்போது தனது முடிவை அது அடையும். அப்போது ஹைட்ரஜன்
வெளியேறி ஹீலியத்தை எரிக்க துவங்குகிறது. பிறகு தனிம வரிசை அட்டவணையில்
அடுத்தடுத்த கூறுகள் அனைத்தும் எரியும். அது சூரியனின் மையத்தில் சரிவை
ஏற்படுத்தும்.
மற்றும்
சூரியனின் வெளிப்புறத்தில் 23 சதவீதம் (நிமிடத்திற்கு 70,000 மீட்டர்) சரிவை
ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
கடந்த
1000 ஆண்டுகளில் மனிதர்கள் வானில் மூன்று வெவ்வேறு சூப்பர் நோவாக்களை
பார்த்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக