Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 23 ஜூலை, 2020

Covaxin பரிசோதனை துவங்கியது: 10 நாட்களுக்கு பிறகு முடிவு!

கோவாக்சின் மருந்து பரிசோதனை சென்னையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துவங்கியது. 

கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின் மருந்தை, மனிதர்கள் மீது செலுத்தும் சோதனை, இன்று சென்னையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துவங்கியுள்ளது.
 
ஆம், காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பூசி கோவாக்சினை மனிதர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு பரிசோதிக்க துவங்கியது. 

முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர்.

முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்களில் 2 பேருக்கு 0.5 எம்.எல் என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!