கொரோனா
வைரஸ் தொற்றுநோயால் (Coronavirus Pandemic) ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இண்டிகோ (IndiGo) தனது பணியாளர்களில் 10 சதவீதத்தை
பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா
(Ronojoy Dutta) திங்களன்று தெரிவித்தார்.
"தற்போது
நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை கருத்தில் கொண்டு, எங்கள் வணிக நடவடிக்கைகளைத்
தக்க வைத்துக் கொள்ளவும், நிறுவனத்தை தொடர்ந்து நடத்தி செல்லவும், சில நடவடிக்களை
எடுக்க வேண்டியுள்ளது. அதில் முக்கியமாக ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்தே தீர
வேண்டிய நிலையில் நிறுவனம் உள்ளது. சில ஊழியர்கள் தங்கள் பணிகளை தியாகங்களைச்
செய்யாமல், பொருளாதார புயலில் (Economic Crisis)
சிக்கிக்கொண்ட எங்கள் நிறுவனம் பறக்க இயலாது" என்று தத்தா தனது அறிக்கையில்
தெரிவித்தார்.
"எனவே,
சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் கவனமாக மதிப்பிட்டு மதிப்பாய்வு செய்தபின்,
எங்கள் பணியாளர்களில் 10 சதவிகிதத்தினர் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என்பது
தெளிவாகிறது. இண்டிகோ வரலாற்றில் முதன்முறையாக இதுபோன்ற ஒரு கஷ்டமான (Painful)
நடவடிக்கையை மேற்கொண்டோம்" என்று அவர் மேலும் கூறினார். 2019 மார்ச் 31 ஆம்
தேதி நிலவரப்படி, இண்டிகோ விமான நிறுவனம் 23,531 ஊழியர்களைக் கொண்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.
We would like to express our heartfelt gratitude and
sincere thanks to all our people who have stood by us through thick and thin;
and we are confident that both individually as well as collectively, we will
emerge stronger out of this crisis. https://t.co/5oaytuCoXz pic.twitter.com/Z8AzhkjRXO
—IndiGo (@IndiGo6E) July 20, 2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக