இன்று முதல் ஆக.5 வரை 15 நாட்களுக்கு
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ்
தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்தியாவில், 1,154,917 பேர்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 28,099 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், திருப்பதியில் கொரோனா
பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அதனை கட்டுப்படுத்தும்
நோக்கில், இன்று முதல் ஆக.5 வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு நாட்களில் பகல் 11
மணிக்கு மேல் திருப்பதி பகுதியில் வெளியே வரக்கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 6 மணி முதல் பகல் 11
மணி வரை மட்டுமே கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக