பெய்ஜிங் விதித்த தேசிய பாதுகாப்புச்
சட்டத்தின் காரணமாக, ஹாங்காங்குடனான ஒப்பந்தத்தினை நிறுத்தி வைக்கும் என்பதை
போரிஸ் ஜான்சன் உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த வாரம் ஹூவாய் உடனான
பிரச்சனைக்கு மத்தியில் சீனா இங்கிலாந்து மத்தியிலான உறவில் விரிசல்
ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து மொபைல் ஆப்பரேட்டர்கள்
2027ம் ஆண்டிற்குள் தங்கள் நெட்வொர்க்குகளிலிருந்து ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகள்
அனைத்தையும் அகற்ற வேண்டும் என்றும் அந்த நாட்டு அரசு உத்தரவிட்டது.
சீனா நிறுவனத்திற்கு தடை
சீன நிறுவனமான ஹூவாய் தேசிய
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாக அப்போது அரசு தெரிவித்தது. அதே போல் டிசம்பர் 31ம் தேதிக்கு
பிறகு அந்த நிறுவனத்தின் 5ஜி கருவிகளை கொள்முதல் செய்யவும் தடை விதிக்கப்படும்
என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
அமெரிக்காவும் தடை
நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தேசிய
பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடை முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக
அரசு கூறியது. முன்னதாக அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும்,
செமிகன்டக்டர்களை ஏற்றுமதி செய்யவும் அமெரிக்கா ஹூவாய் நிறுவனத்துக்கு தடை
விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அரசு முடிவு
இங்கிலாந்து அரசின் முடிவுக்கு சீனா
கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வணிக மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகளை
அரசியலாக்குவதன் மூலம் இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சீன வெளியுறவு
அமைச்சகம் அப்போது தெரிவித்திருந்தது. 2027ம் ஆண்டிற்குள் ஹூவாய் நிறுவன 5ஜி
சாதனங்களை தங்கள் நெட்வொர்க்கில் இருந்து அகற்ற இங்கிலாந்து அரசு முடிவு
செய்துள்ளது.
சீனாவுக்கு எதிரான நடவடிக்கை
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் இந்த
நடவடிக்கையானது சீனாவுக்கு பிரச்சனையை அதிகரிக்கக்கூடும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஏற்கனவே
ஹாங்காங்கிற்கு ஒப்படைக்கப்படுவது தொடர்பாக இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இது திட்டமிடப்பட்ட நடவடிக்கை
முன்னதாக திங்களன்று சீனாவின்
வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், இங்கிலாந்தின்
அத்தகைய நடவடிக்கை, சீனாவுக்கு எதிராக திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகும். இது இரு
நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறினார்.
தவறான பாதையில் செல்ல வேண்டாம்
இந்த நடவடிக்கைகளை நாங்கள் கடுமையாக
கண்டிக்கிறோம். சீனா - இங்கிலாந்து உறவுகளுக்கு மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க,
தவறான பாதையில் மேலும் எந்த நடவடிக்கையினையும் எடுக்க வேண்டாம் என நாங்கள்
இங்கிலாந்தினை கேட்டுக் கொள்கிறோம் என்று சீனா கூறியுள்ளது. இதே போரிஸ் ஜான்சன்
நாங்கள் சீனாவுடன் மோதவில்லை என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக