நோய்கள் வந்த பிறகு வைத்தியம் செய்து கொள்வதை வருவதற்கு முன்பு வைத்தியம் செய்துகொள்வது புத்திசாலித்தனம்.
வீட்டை சுத்தம் செய்வது போன்று நம் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி சுத்தம் செய்யும் பொறுப்பு சிறுநீரகத்துக்கு உண்டு. இவை சீராக செயல்படாத போது ரத்தத்தில் நச்சு கலந்து உடலின் ஆரோக்கியமும் கெட்டுவிடும்.
நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள் குறித்து தெரிந்துகொண்டால் உங்கள் சிகிச்சை எளிதாகவும் விரைவில் குணமடையவும் உதவும். இவை நுணுக்கமான அறிகுறிகள் என்பதால் இதில் இரண்டுக்கு மேற்பட்ட அறிகுறிகளை கண்டதும் நீங்கள் தாமதிக்காமல் சிறுநீரக மருத்துவரை அணுகுவது மிகவும் நன்மை தரும்.
கால்கள்,
பாதங்களில் வீக்கம்
சிறுநீரகத்தி
பணி தொய்வடையும் போது பாதங்கள், கைகள் வீங்க தொடங்கும். உடலில் இருக்கும் நச்சுநீர்
வெளியேறாமல் சோடியத்தின் அளவில் சமநிலை உண்டாகி நீர் தேக்கம் ஆகும். இதனால் வெளியேற
வேண்டிய நச்சு நீர் கணுக்கால், கைகளில் தங்கி வீக்கத்தை உண்டாக்குகிறது.
கணுக்கால்
வீக்கமானது தொடர்ந்து இருக்கும். அதோடு காலணிகளை அணியமுடியாத அளவுக்கு வீங்கும். இதனால்
நடக்கும் போது சிரமத்தை சந்திக்கலாம். கர்ப்பிணிகளுக்கு உண்டாவது இயல்பு. ஆனால் எப்போதும்
இந்த அறிகுறி உங்கள் கிட்னி வேலை பாதிப்பையே உணர்த்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒவ்வாமை, வயிறு கோளாறு
வயிற்று
வலிக்கு பல காரணங்கள் உண்டு. அதனால் வெறும் வயிறு வலியை இதனோடு ஒப்பிடவே முடியாது என்றாலும்,
வயிற்று வலி உடன் குமட்டல் வாந்திஉணர்வு உண்டாவது இரத்தத்தில் கழிவுகள் கலந்ததற்கான
அறிகுறிகளிலும் ஒன்று. இதனால் தான் ஒவ்வாமையை உண்டாக்கும். இதனால் சரியாக சாப்பிட முடியாமல்
எடை இழப்பும் உண்டாகும்.
கர்ப்பிணிகள்
போன்று எப்போதும் குமட்டலும் சோர்வும் வாந்தியும் இருக்ககூடும். பசி எடுத்தாலும் சாப்பிட்ட
உடன் வாந்தி வருவது மிக கடினமாக இருக்கும். இந்த அறிகுறி தொடர்ந்து இருக்கலாம்.
வீக்கமான கண்கள்
தூக்கமில்லாமல்
இருப்பதால் கண்களுக்கு ஓய்வு கிடைக்காமல்ல் கண்களை சுற்றியுள்ள பகுதியில் வீக்கம் உண்டாகும்
என்று நினைப்போம். ஆனால் சிறுநீரானது புரோட்டினை வடிகட்ட முடியாமல் உடல் முழுக்க பரவிவிடுவதால்
அவை கண்களை சுற்றி வீக்கத்தை உண்டாக்கும். முகம் கூட வீக்கத்தை சந்திக்கும். உடல் எடை
குறைந்திருக்கும் நிலையில் முகம் மட்டும் வீங்கியிருப்பதை நன்றாகவே உணர முடியும். குறிப்பாக
கண்களை சுற்றி. ரத்த பரிசோதனை மூலம் சிறுநீரில் உள்ள குளோபுலின் அளவை பரிசோதிக்க முடியும்.
இரவில் அடிக்கடி சிறுநீர்
பொதுவாக
நீரிழிவு நோயாளிகள் தான் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவார்கள் என்று நினைக்கிறொம்.
ஆனால் சிறுநீரகங்களில் பணியில் தொய்வு உண்டாகும் போது அவை செயலிழக்கும் போது அடிக்கடி
சிறுநீரை வெளியேற்றும். அதிலும் வெளிறிய நிறத்தில் இருக்கும். அவை சொட்டு சொட்டாகவும்
இருக்கலாம். குறிப்பாக இரவு நேரத்தில் 4 முதல் 10 முறை வரை சிறுநீர் கழித்தாலும் அபாயம்
என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
நுரைத்து வரும் சிறுநீர்
சமயங்களில் வேகமாக சிறுநீர் கழிக்கும் போது நுரைத்து பொங்குவது உண்டு ஆனால் எப்போதும் அதிக நுரை அல்லது குமிழியாக வெளியேறினால் அதிகளவு புரதம் வெளியேறுகிறது என்று அர்த்தம்.
அதே
போன்று சிறுநீர் பழுப்பு, சிவப்பு ஊதா நிறத்திலும் சிறுநீர் வெளியேறக்கூடும். சிறுநீரகங்கள்
செயலிழக்கும் போது இந்த நிறமாற்றமும் உண்டாக்கும். வெகு சிலருக்கு பிரெளன் நிறத்துடன்
இருந்தாலும் அதில் இரத்தம் கலந்து வருவதற்கு வாய்ப்பு அதிகம். பலரும் இதை சிறுநீர்
தொற்று என்று நினைக்கிறார்கள். ஆனால் இதன் அறிகுறி அதைக்காட்டிலும் அதிகமானதாக இருக்கலாம்.
சிறுநீர் கழிக்காத உணர்வு
சிறுநீர்
கழிக்கும் போது சிறுநீரகப்பையில் இருக்கும் சிறுநீர் முழுமையாக வெளியேற வேண்டும். ஆனால்
இந்த பாதிப்பு இருக்கும் போது சிறுநீரகத்தை கழித்தாலும் அவை முழுமையாக வெளியேறாமல்
இருக்கும். சிறுநீரகம் கழிக்காத உணர்வையும் அழுத்தத்தையும் உண்டாக்கும். அழுத்தி வெளியேற்றூம்
போது நன்றாக இருக்கும். மீண்டும் இதே உணர்வு இருக்கும்.
சருமத்தில் அரிப்பு
இயல்பாகவே
சிறுநீரகமானது உடலில் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது.
ஆனால் சிறுநீரகங்கள் செயலிழக்கும் போது இரத்தத்தில் அதிகப்படியான நச்சுகள் தேங்கிவிடுகிறது.
இதன் பாதிப்பை சருமத்தில் காண்பிக்கின்றன. அதிகப்படியான அரிப்பை சருமத்தில் உண்டாக்கி
விடும். சாதாரணமாக இருக்காது அதிகப்படியான நமைச்சலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.
சோர்வு, பலவீனம், மயக்க
உணர்வு
உடலில்
சிறுநீரகத்தின் பணி தொய்வடையும் போது ரத்தத்தில் நச்சு அதிகமாக இருக்கிறது. சிறுநீரகம்
உடலில் வைட்டமின் டி சத்தை எரித்ரோபயோடினாக மாற்றுகிறது. இவை ரத்த சிவப்பு அணுக்களுக்கு
உதவக்கூடியவை. இந்த உற்பத்தி குறையும் போது ரத்த சிவப்பணுக்கள் குறைந்து ஆக்ஜிஜன் பற்றாக்குறை
உண்டாகிறது. இதனால் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் தடைபடுவதால் மயக்கம், நாள்
முழுக்க பலவீனம், உடல் சோர்வு போன்றவை உண்டாகிறது. பொதுவாக இவை நீரிழிவு, ரத்த அழுத்தம்
தொடர்பான அறிகுறிகளை கொண்டிருப்பதால் இதை நாம் கவனத்தில் கொள்வதில்லை.
அதிக வெப்பநிலையிலும்
குளிர்திறன்
இது
பொதுவான அறிகுறி என்பதால் பெரும்பாலும் எல்லோரும் குளுமை உடலுக்கு இத்தகைய பிரச்சனை
என்று நினைக்கிறார்கள். நாள்பட்ட சிறுநீரக பிரச்சனை இருக்கும் போது அனிமீயா என்னும்
ரத்த சோகை உண்டாக அதிக வாய்ப்புண்டு. அதே நேரம் வெப்பநிலை சீராக இருக்கும் அறைகளில்
கூட குளிர்ச்சியை உண்டாக்கிவிடும். எப்போதும் குளிரை உணர்வதும் அதிக வெப்பமான இடங்களிலும்
குளிரை உணர்வதும் கூட கவனிக்க வேண்டிய அறிகுறிகள்.
வாய்துர்நாற்றம்
உடலில் நச்சுக்களை வெளியேற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் குறை உண்டாகும் போது நச்சுகள் உடலில் தேங்கிவிடுகிறது. அப்போது உடலில் தங்கும் நச்சுக்கள் வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும். பெரும்பாலும் வாய் துர்நாற்றத்தை அருகில் இருப்பவர்கள் உணர்வார்கள். ஆனால் உடலில் இருக்கும் இந்த வாடையை நீங்கள் சுவாசத்தின் போதும் சாப்பிடும் போது வெகுவாகவே உணர்வீர்கள்.
இந்த
அறிகுறிகள் அதிகமாகும் போது மூச்சு விடுதலில் சிரமத்தை உணர்வீர்கள். ஏனெனில் உடலில்
இருக்கும் கூடுதல் நீரானது நுரையீரலுக்கு சென்று மூச்சு சுவாசத்தை சிரமமாக்கும். உடலுக்கு
ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் உண்டாகும். இந்த அறிகுறிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவை உங்களுக்கு
தொடர்ந்து இருந்தால் நீங்கள் தாமதிக்காமல் சிறுநீரக மருத்துவரை அணுகுவது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக