
இந்தியாவின்
முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அரவிந்த் பேஷன்ஸ் நிறுவனத்தில் சுமார்
260 கோடி ரூபாய் முதலீடு செய்து குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளைக்
கைப்பற்றியுள்ளது.
இந்திய
இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகவும் விரும்பத்தக்க பிராண்டாக இருக்கும் Flying
Machine brand-ஐ அரவிந்த் பேஷன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான அரவிந்த் யூத்
பிராண்ட்ஸ் நிறுவனம் வைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் தான் தற்போது ஆன்லைன்
ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் 260 கோடி ரூபாய் முதலீடு செய்து பங்குகளைக்
கைப்பற்றியுள்ளது.
இதன்
மூலம் ஆடை வர்த்தகத்தில் பிளிப்கார்ட் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடிவு
செய்துள்ளது, தற்போது அனைத்து விதமான ஆடைகளையும் பிளிப்கார்ட் மற்றும் தனது பேஷ்ன்
பிராண்டான மைந்திரா-விலும் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கல்யாண்
கிருஷ்ணமூர்த்தி
இந்திய
ஆடை விற்பனை சந்தையில் Flying Machine பிராண்டுக்கு மிகப்பெரிய சந்தை உள்ளது.
அதிலும் குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்டைல் மற்றும் வடிவத்திற்கு இந்திய இளைஞர்கள்
மத்தியில் சிறப்பான வரவேற்பு இருக்கிறது. இந்த முதலீட்டின் மூலம் அரவிந்த் யூத்
பிராண்ட் உடன் இணைந்து Flying Machine பிரண்டின் வர்த்தகத்தையும், ஆடைகளைப்
பல்வேறு வகையில் மேம்படுத்தத் திட்டமிட்ட உள்ளோம் எனப் பிளிப்கார்ட் நிறுவனத்தின்
தலைவர் கல்யாண் கிருஷ்ணமூர்த்தித் தெரிவித்துள்ளார்.
அரவிந்த்
பேஷன்ஸ் நஷ்டம்
2020ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில்
அரவிந்த் பேஷன்ஸ் 10 லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. 2019ஆம்
நிதியாண்டில் இதே காலகட்டத்தில் அரவிந்த் பேஷன்ஸ் கிட்டதட்ட 20 கோடி ரூபாய்
லாபத்தை அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்கு
விலை உயர்வு
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த முதலீட்டின்
அறிவிப்பின் மூலம் அரவிந்த் பேஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று காலையில் 5
சதவீதம் அதிகரித்து 178.10 ரூபாய் வரையில் உயர்ந்தது. ஆனால் வர்த்தக முடிவில்
வெறும் 0.21 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்திருந்தது.
மேலும் அரவிந்த் பேஷன்ஸ் நிர்வாகக் குழு
400 கோடி ரூபாய் மதிப்பிலான ரைட்ஸ் வெளியீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ரீடைல் வர்த்தகம்
கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக இந்திய
ரீடைல் சந்தை அதிகளவில் பாதித்துள்ள நிலையில், ஆடை விற்பனையும் இக்காலகட்டத்தில்
மிகவும் மோசமான நிலையில் பாதிப்பு அடைந்தது. கடந்த 4 மாதங்களாக மக்கள்
வேலைவாய்ப்பு இல்லாமல் சேமிப்பைச் செலவு செய்து வருவதால், தேவையற்ற பொருட்களை
வாங்குவதை அடியோடு நிறுத்திவிட்டனர். இதனால் ஆடை விற்பனை அதிகளவில்
பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் பேஷன்ஸ்
இந்தியா முழுவதும் 1,290 தனிப்பட்ட
கடைகளும், 10,000க்கும் அதிகமான மல்டி பிராண்டு கடைகளில் அரவிந்த் பேஷன்ஸ்
வர்த்தகம் செய்கிறது. கொரோனா பாதிப்பின் காரணமாகத் தற்போது 75 சதவீத கடைகள்
மட்டுமே இயங்கி வருவதாக அரவிந்த் பேஷன்ஸ் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக