Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 6 ஜூலை, 2020

5-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

சனிபகவான் நீதிமான், நியாயவாதி ஆவார். அதனால்தான் தராசு சின்னம் கொண்ட துலாம் ராசியில் உச்சமாகிறார்.

சனிபகவான் அசுப கிரக வரிசையில் முதலிடம் வகிப்பவர். இவரின் நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி. மேலும் கிரக ரத்தினங்களில் உள்ள நீலக்கல்லும் இவருடையதுதான்.

கிரகங்களில் சேவகனான இவர், மனித உடலில் நரம்பிற்கு காரகன் ஆவார். தொடை, பாதம், கணுக்கால் இவற்றின் சொந்தக்காரர். பஞ்சபூதங்களில் இருக்கும் காற்று சனிபகவானிற்கு உரியது. 

லக்னத்திற்கு 5-ல் சனி இருந்தால் அந்த ஜாதகக்காரர் விநோதமான கண்ணோட்டங்களை உடையவராக இருப்பார்.

5-ல் சனி இருந்தால் என்ன பலன்?

👉 பிறரின் பிரச்சனைகளில் தலையிடுவார்கள். 

👉 குறைந்த சேமிப்பை கொண்டவர்கள். 

👉 குழப்பம் மற்றும் கவலை மிகுந்த எண்ணங்களை கொண்டவர்கள்.

👉 அனைவரிடமும் பழகக்கூடியவர்கள். 

👉 சந்தேகம் மற்றும் குழப்பமான மனநிலையை கொண்டவர்கள். 

👉 வாரிசுகளால் மகிழ்ச்சியின்மை உண்டாகும். 

👉 குறுகிய மனதை உடையவர்கள்.

👉 எதையும் சமாளிக்கும் திறமை கொண்டவர்கள்.

👉 புத்திர பாக்கியம் தாமதமாகும்.

👉 வீண் செலவுகளை செய்யக்கூடியவர்கள்.

👉 மனதில் நிம்மதியற்ற நிலையை உடையவர்கள். 

👉 சிறு விஷயங்களுக்காக மனதை குழப்பிக் கொள்ளக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!